உங்கள் திருமண மற்றும் பிறந்த நாள் பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் நடனமாட வேண்டுமா – அப்போ இத்தனை கோடி இருந்தா போதும்.

0
334
bollywood
- Advertisement -

திருமணம் முதல் பிறந்தநாள் பார்ட்டியில் பாலிவுட் நடிகர், நடிகைகள் நடனமாட வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே விஐபி, விவிஐபிகளின் திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டியில் நடிகர், நடிகைகளை அழைத்து வந்து நடனம் ஆட வைப்பது வழக்கம். இதற்கு நடிகர், நடிகைகள் கணிசமான அளவு பணம் வசூலித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது மர்மமாகவே இருந்தது. இந்த நிலையில் பார்ட்டியில் நடனமாட நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ஷாருக்கான்:

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்படும். ஷாருக்கான் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டியில் நடனமாட ஷாருக்கான் 3 கோடி ரூபாய் வசூலிக்கிறார்.

- Advertisement -

கத்ரீனா கைஃப்:

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் திருமண முதல் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தனியார் பார்ட்டியில் நடனமாட 3.5 கோடி வசூலிக்கிறார்.

ஹ்ரித்திக் ரோஷன்:

பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன்.
இவர் தன்னுடைய நடிப்பு, அழகால் உலக அளவில் உள்ள ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். தற்போது எவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் திருமண முதல் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தனியார் பார்ட்டியில் நடனமாட 2.5 கோடி வசூலிக்கிறார்.

-விளம்பரம்-

சல்மான் கான்:

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் திருமண முதல் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தனியார் பார்ட்டியில் நடனமாட 2 கோடி வசூலிக்கிறார்.

தீபிகா படுகோன் :

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக தீபிகா படுகோன் திகழ்கிறார். இவர் இந்தியில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கிறார். சமீப காலமாக கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமண முதல் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தனியார் பார்ட்டியில் நடனமாட 1 கோடி வசூலிக்கிறார்.

ரன்வீர் சிங்:

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் 2010 ஆம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப் படத்தின் மூலம் தான் பாலிவுட் திரைப்படத் துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இவர் திருமண முதல் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தனியார் பார்ட்டியில் நடனமாட 1 கோடி வசூலிக்கிறார்.

பிரியங்கா சோப்ரா :

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதோடு இவர் பல விளம்பரங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் திருமண முதல் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தனியார் பார்ட்டியில் நடனமாட 2.5 கோடி வசூலிக்கிறார்.

ரன்பீர் கபூர் ரூ.2 கோடியும், நடிகர் அக்‌ஷய் குமார் 2.5 கோடியும் கட்டணமாக வசூலித்து வருகின்றனர். திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டிகளில் பங்கேற்க வரும் நடிகர் மற்றும் நடிகைகள் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேசுவதோடு சிறப்பு விருந்துகளிலும் கலந்து கொள்கின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement