எதிர்பாராத நேரத்தில் புதிய போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்.!

0
2069
Booney
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தான் அஜித்தின் படத்தை தயாரிக்க இருக்கிறார். மேலும், அஜித்திற்காக மூன்று கதை தயாராக இருக்கிறது என்றும் ஒருவேளைஅஜித் சம்மதித்தாள் கண்டிப்பாக அஜித்தை வைத்து இந்தியில் ஒரு படம் எடுப்பேன் என்றும் உறுதி கூறி இருந்தார் போனி கபூர்.  ஒரு வேலை அஜித் இந்தி படத்தில் நடித்தால் அது அஜித்தின் ரசிங்கர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமையும். 

இதையும் பாருங்க : தவறுதலாக நாமினேஷன் வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.! இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.!

- Advertisement -

ஆனால், சமீபத்தில் இதுகுறித்து நேர்மறையான கருத்தை பாதிவிட்டுள்ளார் போனி கபூர். இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள அவர், “நானும் அஜித்தும் தொடர்ந்து மூன்று படங்களில் பணிபுரிவது தொடர்பாக சில தவறான தகவல்கள் பரவுகின்றன. இதனை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித்தும் நானும் சேர்ந்து ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுக்கிறோம். அதே நேரம் ஹிந்தியில் நடிக்க வைக்க நான் விரும்புகிறேன். ஆனால், அதுகுறித்து அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.”என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இன்று மாலை 6 மணிக்கு படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் போனி கபூர்.

-விளம்பரம்-
Advertisement