சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர்.குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.தொலைக்காட்சியில் டிவி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார்.
ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு வெளிவந்த விருமன் படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். தற்போது ரோபோ சங்கர் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடலுடன் இருந்த ரோபோ ஷங்கர் சமீப காலமாக உடல் எடை குறைந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரோபோ ஷங்கர் மகள் ரோபோ ஷங்கருடன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ரோபோ ஷங்கர் இளைத்து இருப்பதை பார்த்து பலரும் என்ன ஆனது ஏதாவது சுகரா இல்ல சரக்கா என்று கேலி செய்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் ரோபோ சங்கரின் உடல் எடை குறைந்த காரணம் குறித்து நடிகரும் ரோபோ சங்கரின் நெருங்கிய உறவினருமான போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அதில் பேசிய அவர் ரோபோ ஷங்கருக்கு உடலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதும் அவர் உடல் எடை குறைந்து இருப்பதும் உண்மைதான். யாருக்கு வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அதுபோலத்தான் ரோபோ சங்கருக்கும் உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால், அவரது உடல் எடை குறைந்ததற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுவதை பார்க்க முடிகிறது. விரைவில் ரோபோ சங்கர் பூரண குணமடைந்து பழையபடி நல்ல நிலைக்கு திரும்பி வருவார் என்று கூறியிருக்கிறார்.