பிரபல விருது விழாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு. புறக்கணிக்கும் நெட்டிசன்கள். காரணம் இது தான்.

0
10469
filmfare

இந்தியாவில் வருடம் வருடம் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமா திரை உலகிலும் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமான அளவில் நடைபெறும். இந்த விருது விழாக்கள் என்றால் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு தான் ஹிந்தியில் 65வது பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களும், மூத்த கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், வசனகர்த்தா உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஸோயா அக்தர் இயக்கிய கல்லி பாய் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தது.

நவீன கால இசை ஹிப் ஹாப் கலாச்சாரத்தைப் பற்றிய திரைப்படம். மும்பை நகரின் அருகில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதி என்று கூறப்படும் தாராவியில் குடியிருக்கும் ஒரு தெருப்பாடகன் ஹிப் ஹாப் இசை கலைஞராக உருவாக துடிப்பதை உண்மை தன்மை மாறாமல், உயிரோட்டத்துடன் காண்பித்துள்ளார் இயக்குனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இளைஞனாக இந்த படத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நாயகியாக ஆலியா பட் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த ரன்வீர் சிங்கும் – ஆலியா பட்டும் சிறந்த நடிகர் -நடிகைக்கான விருதை பெற்றனர். இந்நிலையில் இந்த படத்தில் சிறந்த பாடலாக அப்னா டைம் ஆகையா விருதை வென்றுள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : படம் தோல்வியடைந்தால் நான் பொறுப்பில்லை. இணையத்தில் வைரலாகும் அஜித்தின் பழைய வீடியோ.

அதே சமயம் கடந்த வருடம் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த கேசரி படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 1897 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை எதிர்த்து 21 சீக்கியர்கள் போரிட்ட சஹார்க்கி போரை மையபடுத்தி எடுக்க பட்டது படம். இந்த படத்தில் ஹவில்தார் இசார் சிங் கேரக்டரில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரணிதி சோப்ரா நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த கேசரி படத்தில் வெளியான ‘தேறி மிட்டி’ என்ற பாடலுக்கு விருது கொடுக்காமல் கல்லி பாய் படத்தில் வெளியான ‘அப்னா டைம் ஆகையா’ என்ற பாடலுக்கு விருது வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இதனால் கேசரி படத்தின் பாடலாசிரியர் கடுமையாக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் இந்த விருது விழாவை குறித்து சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக வறுத்தெடுத்து வருகின்றனர். அதோடு மற்ற படங்களுக்கு விருதுகள் புறக்கணிக்கப்பட்டது தொடர்ந்து ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் #BoycottFilmFare என்ற ஹாஸ்டேக் தற்போது தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisement