கொரோனா வைரஸ் பரவலினால் உலக மக்கள் அனைவரும் அச்சத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 1684 பேர் பாதிக்கப்பட்டும், 38 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளை தாண்டி வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை.
இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய குடும்பங்களை மறந்தும், உயிரை பணய வைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து வைத்தும் வருகின்றனர். சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த பண உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : 8 மாத கர்ப்பிணியாக இருந்தும் கடந்த வாரம் வரை டாக்டர் சேவை. எழுந்து நின்று கைதட்டிய டாக்டர்கள். மனைவி குறித்து விமல் நெகிழ்ச்சி.
பிரபலங்கள் கொரோனா பரவலைத் தடுக்க முதலமைச்சர் நிவாரண நிதி அல்லது பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அந்தந்த திரையுலகினர் தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகிறார்கள். தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார்கள்.
அதேபோல் தெலுங்கு திரையுலகிலும் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்ட பல நடிகர்களும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி உள்ளார்கள். இதுவரை நிதி அளித்தவர்களில் பெரும்பாலானோர் நடிகர்கள் தான். நடிகைகள் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரம்மாஜி அவர்கள் முன்னணி நடிகைகளை குறித்து குறை கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பது, பல முன்னணி நடிகைகள் மும்பையை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் தெலுங்கு சினிமாவில் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். நட்சத்திர அந்தஸ்தும் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், லாவண்யா திரிபாதி நடிகையை தவிர வேறு யாரும் நிவாரண நிதிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
நீங்கள் லட்சங்களை கொடுக்க தேவையில்லை. குறைந்தது ஆயிரங்களையாவது நிதி உதவி செய்யலாமே? கோடிகளில் சம்பளம் வாங்கும் மும்பை நடிகைகள் யாருமே தொழிலாளர்களுக்கு உதவி செய்யாதது ஏன்? என்று ஆதங்கத்துடன் கூறி இருக்கிறார். மேலும், நடிகர் பிரம்மாஜி அவர்கள் 70 ஆயிரம் ரூபாய் தெலுங்கு திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு நிதியுதவி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர் பிரம்மாஜி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவர் பெரும்பாலும் தெலுங்கு மொழிப் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். இவர் தமிழில் ஸ்ரீகாந்த்தின் ஜூட், சிம்புவின் சரவணா, கௌரவம், சாகசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.