கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சொர்ணாக்காவாகவே பிரதிபலித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். ஒரு காலத்தில் இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகந்தவர். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நடிகை தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவர் தன் குடும்பத்தில் இருந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.. பின் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் வனிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு முன் தான் வெற்றிகரகமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளராக வனிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் பாருங்க : ‘நாங்கள் ஒன்றாக இருக்கும் ஒரே புகைப்படம்’ தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்.
தற்போது வனிதா வெற்றியாளராக பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் வனிதா தற்போது புதிதாக யூடுயூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இப்படி ஒரு தனி பெண்ணாக வனிதா செய்து வரும் பல்வேறு விஷயங்களும் பல்வேறு பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாகத் தான் இருந்து வருகிறது. இப்படி வனிதா ஒரு வலிமையான பெண்ணாக இருந்து வந்தாலும் தனது குடும்பத்தை பிரிந்திருப்பது குறித்து பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் வனிதா தனது சிறுவயதில் தனது அம்மா மஞ்சுளாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது முதல் பிறந்த நாள் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தில் வனிதாவை மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசன் கையில் ஏந்தியபடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதையும் பாருங்க : 8 மாத கர்ப்பிணியாக இருந்தும் கடந்த வாரம் வரை டாக்டர் சேவை. எழுந்து நின்று கைதட்டிய டாக்டர்கள். மனைவி குறித்து விமல் நெகிழ்ச்சி.
ஏற்கனவே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா தன்னுடைய அம்மா மஞ்சுளா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், எங்கள் குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்ட போது எங்க அம்மா தான் மொத்தக் குடும்பத்தையும் பார்த்து கொண்டார்கள். பிறகு மொத்த குடும்பத்தையும் அமெரிக்கா கூட்டிட்டு போய் செட்டில் பண்ணி, எங்களை எல்லாம் பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்க ஆரம்பித்தார்கள். அங்கு மஞ்சுளா சவுத் இந்தியன் ஹோட்டல் ஒன்று ஆரம்பித்தார்கள். அந்த ஹோட்டலில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு உணவு பிரமாதமாக இருக்கும். எங்க அம்மா தனியாக நின்று மொத்த குடும்பத்தையும் பார்த்து கொண்டார்கள். அந்த வயதில் அந்த கஷ்டமான சூழ்நிலையில் எங்க அம்மா சாதித்தார்கள். என்னால் மறக்க முடியாது என்று கூறி இருந்தார்.