பிரிட்டன் ராணி அணியும் கோஹினூர் வைரம் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுமா ? பின்னணி இதோ.

0
412
queen
- Advertisement -

கோகினூர் வைரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்தியா இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபத் காலமானது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் இறந்ததை அடுத்து அவருடைய உடலை விண்ட்சர் பகுதியில் உள்ள அவற்றின் கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபத் மறைவை அடுத்து இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உட்பட பல உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும், இரண்டாம் எலிசபெத் ராணி அணிந்திருந்த கிரீடத்தில் இந்தியாவுக்கு சொந்தமான கோஹினூர் வைரம் இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது இதை மீண்டும் இந்தியாவுக்கே கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளார்கள். கோகினூர் வைரத்தின் இன்றைய மதிப்பு சுமார் 400 மில்லியன் யூரோ என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 3189 கோடியே 83 லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் கோஹினூர் வைரத்தை பற்றி பலரும் அறிந்திடாத வரலாற்றை இங்கு பார்ப்போம். இந்த கோஹினூர் வைரம் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள கொல்லூர் வைர சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. 793 கேரட் எடை கொண்ட இந்த வைரம் உலகின் மிகப்பெரிய வைரக்கல்லாக அப்போது இருந்தது.

- Advertisement -

இந்த வைரம் கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாக பல இஸ்லாமிய, சீக்கிய, பிரிட்டன் மன்னர்களிடையே கைமாறுகிறது. தற்போது லண்டன் டவரில் இந்த வைரக்கல் பாதுகாக்கப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டில் காகத்திய மன்னர் வம்சம் தான் இதனை முதலில் வைத்திருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத நூலில் ‘ஸ்யாமந்தகா ஜெம்’ என்று கோஹினூர் வைரத்தை கூறியிருந்தார்கள்.

பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய மன்னர்களான அலாவுதீன் கில்ஜி, ஷாஜஹான், அவுரங்கசிப், இப்ராஹிம் லோடி, முகமது ஷா, நதீர் ஷா ஆகியோரிடம் இந்த வைரம் கைமாறிக் கொண்டே இருந்தது. இந்த வைரத்திற்கு பெர்சிய மன்னர் நதீர் ஷா பெரிசிய மொழியில் மலையின் ஒளி என்று பெயர் வைத்திருந்தார். தற்போது இதை இளைத்து டிசைன் செய்யப்பட்ட இந்த வைரத்தின் இறுதி வடிவம் 103 கேரட்டில் 37 கிராம் எடையிலேயே இருக்கிறது.

-விளம்பரம்-

1849 ஆம் ஆண்டு பஞ்சாப் அரசாட்சியை கைப்பற்ற பிரிட்டன் கிழக்கு இந்திய கம்பெனி ராணுவத்தை அனுப்பி இருந்தது. அதுவரை பஞ்சாபை ஆண்டு வந்த சீக்கிய மன்னரை இந்த போரில் தோற்கடித்த பிரிட்டன் வீரர்கள் ஒப்பந்தப்படி பஞ்சாப் அரசிடம் இருந்த கோகினூர் வைரத்தை கைப்பற்றி விக்டோரியா ராணி இடம் ஒப்படைத்து இருந்தார்கள். அன்று முதல் தற்போது வரை இது பிரிட்டன் அரசு குடும்ப மணிமகுடத்தில் இடம் பெற்றுருக்கிறது.

இந்தியாவில் மிகையாக கிடைத்த நமது பாரம்பரிய காரமான மசாலா பொருட்களை வாங்கி விற்க வந்த பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனி கடைசியில் நமது பாரம்பரிய அடையாளங்களான மயிலாசனம், கோகினூர் வைரம் உள்ளிட்ட பல பொருள்களை களவாடி இருக்கிறது. தற்போது கோகினூர் வைரத்தை இந்தியா மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது.

Advertisement