விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இது போன்ற பதிவுகளை சமுக வலைதளங்களில் பதிவு செய்ய கூடாது – புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்.

0
715
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் இனம், மொழி, ஜாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர். புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு கோடிக்கணக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

விஜய் மக்கள் இயக்கம்:

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் போட்டியிட்டு இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார். எனவே விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்:

இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்து தொகுதி வாரியாக ஏராளமான விஜய் மக்கள் இயக்க ஐடி விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புஸ்ஸி ஆனந்த் கூறியது. 31 ஆண்டுகள் முன் தொடங்கபட்ட விஜய் ரசிகர் மன்றம் 15 ஆண்டுகளுக்கு விஜய் மக்கள் இயக்கமாக மாறி பல அணிகளை கட்டமைத்து வருகிறோம். மேலும் கூறிய அவர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சமூக வலைத்தளங்களில் இனம், மொழி, ஜாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும் அவர் தரம் தாழ்ந்த கருத்துகளை பதிவிட கூடாது. நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் மற்றும் ஷேர் செய்யக் கூடாது. தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்ட வேண்டும்.” என்றும் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

Advertisement