இலவச வீடு கட்ட விஜய் காசு கொடுத்தாரா? நிருபர் கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் நச் பதிலடி

0
305
- Advertisement -

தற்போது ‘விஜய் விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டம்’ குறித்து செய்தியாளரின் சர்ச்சை கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் கொடுத்த பதிலடி தான் பேசும் பொருளாக உள்ளது. தமிழ்நாட்டின் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் விஜய் அவர்கள் ‘ தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார்.

-விளம்பரம்-

இதனால் நிர்வாகிகள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். தற்போது விஜய் தனது ரசிகர்கள் சார்பிலும், கட்சி உறுப்பினர்கள் சார்பிலும் தொடர்ந்து பல நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று, விஜய் விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் வழங்கப்பட்டது.

- Advertisement -

செய்தியாளர் சர்ச்சை கேள்வி:

அதாவது சென்னையை அடுத்த பொன்னேரியில் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, விஜய் ரசிகர் மன்றம் சார்பில் கட்டப்பட்ட விலையில்லா வீடுகள் இரண்டை ரசிகர் மன்ற செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸிடம், ‘ரசிகர்கள் பணம் திரட்டி கட்டித்தந்த வீட்டிற்கு விஜய் இலவச வீடு என்று பெயர் சூட்டியது ஏன், விஜய் ரசிகர் மன்ற இலவச வீடு என்று பெயர் வைக்கலாமே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

புஸ்ஸி ஆனந்தின் பதிலடி:

அதற்கு புஸ்ஸி, வீடுகளை நாங்க கட்டிக் கொடுத்திருக்கோம் என்று சொன்னோம். அதை விஜய் கொடுத்தாரா இல்லை ரசிகர்கள் கொடுத்தாங்களான்னு நாங்க சொல்லவே இல்லை. தளபதி விலையில்லா வீடு திட்டத்தில் இதை கட்டி கொடுத்து கொடுத்திருக்கோம் என்று நாங்க சொல்றோம் அவ்வளவுதான். மேலும் இந்தத் திட்டத்திற்கு தளபதி பணம் கொடுத்தாரா இல்லையா என்று உங்களுக்கு தெரியுமா? சொல்லுங்க தெரியுமா? என்று செய்தியாளருக்கு சற்று கோபத்தோடு புஸ்ஸி பதிலடி கொடுத்தார்.

-விளம்பரம்-

தளபதியின் நலத்திட்டங்கள்:

இது மட்டும் இல்லாமல், சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு இருந்த குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் வகையில் கல்வி விழா ஏற்பாடும் செய்திருந்தார். கடந்த உலக பட்டினி தினத்தன்று, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது.

நெட்டிசன்கள் ட்ரோல்:

இது போல் கடந்த ஆண்டு ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டது. அதில் ஒரு மாணவன் எதுவும் எழுதாத நோட் ஒன்றை வைத்து படித்துள்ளார் என நெட்டிசன்கள் பலரும் கேலி செய்திருந்தனர். தற்போது விஜயின் வீடு வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதற்கு பலரும், நல்லது பண்ணா இப்படி தான் ட்ரோல் பண்ணுவாங்க என்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக கமெண்ட்கள் போட்டு வருகின்றனர்.

Advertisement