நான் அஸ்ஸலாமு அலைக்கும் சொன்னேன். நீங்கள் ஸ்ரீராமஜெயம் சொல்வீர்களா அமீர் – லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி.

0
52814
lakshmiramakrishnan
- Advertisement -

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். மேலும், இவர் திரைப்பட நடிகையாகவும் , இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார். இதுவரை 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதேபோல இவர் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய மீட்பு விவகாரம் குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்பட நடிகை சின்மயி உள்ளிட்ட பிரபல பெண்கள் உடன் இணைந்து பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து பேசி இருந்தார்கள். அப்போது பிரபல திரைப்பட இயக்குனரான அமீர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதில் பெண்களை ஆண்கள் யாரும் மதிப்பதில்லை என்று கூறுவது தவறு பெண்கள் பெண்களை மதிக்கிறார்கள் என்ற கேள்வி இப்போது எழுகிறது.

- Advertisement -

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மீடூவில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், இதே பிரச்சனையில் சிக்கி பலியான தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சேலம் சிறுமி ராஜலட்சுமிக்கு ஆதரவு தரும் வகையில் ஏன் குரல் கொடுக்கவில்லை. ராஜலட்சுமிக்கு நேர்ந்த கொடுமையை பேச முன்வரவில்லை இங்கு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து பேச யாரும் முன்வருவதில்லை இதிலும் சாதி பார்க்கப்படுகிறது என்று கூறி இருந்தார்.

நீங்க ஸ்ரீராமஜெயம் சொல்லுவீங்களா அமீர்? – லட்சுமி ராமகிருஷ்ணன்

நீங்க ஸ்ரீராமஜெயம் சொல்லுவீங்களா அமீர்? – லட்சுமி ராமகிருஷ்ணன்Video Out Now:- https://youtu.be/yJJr6w5-5dU#LakshmyRamakrishnan #Nerkondapaarvai #LakshmyRamakrishnanExclusiveInterview #AmeerSultan #naanveezhvenendruninaithayo

Maalai Malar News தமிழ் ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಮಾರ್ಚ್ 7, 2020

அமீர் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு இருந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அமீரை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பிரச்சனை நடந்து பல மாதங்கள் ஆன நிலையில் சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.அப்போது பேசிய அவர், அமீர் என்னை ஜாதிபார்த்துத்தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுப்பீர்களா என்று கேட்டிருந்தார் அவர் எப்படி அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. என்னுடைய படத்தில் கூட பல கதாபாத்திரங்களில் இஸ்லாமியர்களை நான் காண்பித்திருக்கிறேன்.

-விளம்பரம்-

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது நிகழ்ச்சிக்கு புர்கா போட்டு கொண்டு பெண் ஒருவர் வந்திருந்தார் அவருக்கு என்னை அறியாமலேயே நான் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினேன். நீங்கள் ஸ்ரீராமஜெயம் சொல்லுகிறீர்களா அமீர் ? என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும், நான் சூரிய நமஸ்காரம் செய்யும் போது கூட அனைத்து கடவுள்களின் பெயரை கூறி விட்டு அல்லாஹ் என்று சொல்லித்தான் முடிப்பேன் . என்னுடைய குடும்பத்தில் நான் இப்படித்தான் வளர்ந்தேன் என்னுடைய குழந்தைகளுக்கும் நான் இதைத்தான் சொல்லிக் கொடுத்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement