சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய எழுபதாவது படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, சித்தார்த் விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கிரீன் சிக்னல் அவர்கள் தயாரித்து உள்ளார். மேலும், இது ஜெய்யின் 25வது படமாகும். சித்தார்த் விபின் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். இன்று ஜெய்யின் கேப்மாரி படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டம் இல்லை. அவர்கள் அத்து மீறி செய்யும் செயலால் ஏற்படும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் வைத்து தான் கதை அமைந்து உள்ளது. அதோடு இந்த படத்தின் பெயரைப் பார்த்து அனைவருமே வியந்து போனார்கள்.

கதைக்களம்:
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை தான் கடைசியாக இயக்கினார். ஆனால், இந்த படம் போதியளவு வரவேற்பைப் பெறாததால் தற்போது ஜெய்யை வைத்து “கேப்மாரி” என்ற படத்தை இயக்கி உள்ளார். பலரும் ஏன் இவ்வளவு பிரபல இயக்குனர் கேப்மாரி என்ற தலைப்பை வைத்து உள்ளார் என கேள்வி கேட்டார்கள். முன்பொரு காலத்தில் தொப்பியை மாற்றி மாற்றி போட்டு விளையாடுபவர்கள் கேப்மாரி என்று அழைப்பார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இந்த வார்த்தையை கெட்ட வார்த்தையாக மாற்றி விட்டார்கள் . ஒரு இளைஞன் நான்கு பெண்கள் வாழ்க்கையில் விளையாடுகிறான் எனும் போது இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்றும் கூறி உள்ளார்.
இதையும் பாருங்க : அந்த படத்தில் நடித்தது தான் மிகப்பெரிய தவறு. இறுதியாக போட்டுடைத்த சிவகார்த்திகேயன்.
ஜாலியா பையனாக, பிளே பாய்யாக ஜெய் நடித்து உள்ளார். இந்த படத்தில் ஜெய் அவர்கள் சுத்தமான குடி(பீர்)மகனாக நடித்து உள்ளார். நடிகர் ஜெய் அவர்கள் ஒரு ஐடிஐ கம்பெனியில் வேலை செய்பவர். ஒரு முறை ஜெய் வெளியூர் பயணத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது தான் ரயிலில் ஹீரோயின் வைபவி சாண்டில்லாவை சந்திக்கிறார். பிறகு இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு பயணம் செய்கிறார்கள். அதோடு கொஞ்சம் நேரத்திலேயே நண்பர்களாக பேசி வருகிறார்கள். அப்போது ஹீரோ ஜெய் அவர்கள் மது அருந்துகிறார். மேலும், அந்த மது பானத்தை ஹீரோயின் வைபவிக்கும் கொடுத்து குடிக்க வைக்கிறார். இவர்கள் இருவரின் நிலையும் தடுமாறுகிறது. பின் அவர்கள் தன் நிலை அறியாமல் எல்லை தாண்டி நடந்து கொள்கிறார்கள். இந்த படத்தில் ஜெய்யின் ரொமான்ஸ் வேற லெவல்ல உள்ளது. அதற்கு பின் அவர்கள் இருவரும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல மாதங்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். பின் உடனே இவர்கள் திருமணம் செய்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். அப்போது தான் அலுவலக தோழியாக அறிமுகமாகிறார் நடிகை அதுல்யா ரவி. அதுல்யா ரவி ஒரு பக்கம் நடிகர் ஜெய்யை காதலித்து வருகிறார். ஒரு நாள் அதுல்யா ரவியின் வீட்டிற்கு ஜெய் மது அருந்தி விட்டு போதையில் செல்கிறார். அதற்கு பின் சில நாட்களில் அதுல்யா கர்ப்பமான நிலையில் இருக்கிறார் என்று தெரிய வருகிறது. இதனால் வைபவி, ஜெய்யும் அதிர்ந்து போய்கிறார்கள். உண்மையிலேயே ஜெயாவுக்கும், அதுல்யாவுக்கும் இடையே என்ன நடந்திருக்கும்?? ஜெய்யும்– வைபவியும் விவாகரத்து பெற்று பிரிகிறார்களா?? அதுல்யா ரவியை ஜெய் திருமணம் செய்து கொள்கிறாரா?? எப்படி எல்லாம் இந்த பிரச்சனையை ஜெய் சமாளிக்கிறார் என்பது தான் கேப்மாரி படத்தின் மீதி கதை.

பிளஸ்:
ஜெய் உடைய கெட்ட பழக்கங்கள் எல்லாம் தெரிந்தும் அவரை விட்டுக் கொடுக்க முடியாமல் சராசரி பெண்ணாக நடிகை வைபவி.திணறும் காட்சிகள் அற்புதமாக உள்ளது.
படத்தில் காமெடி காட்சிகளில் தேவதர்ஷினி, சத்தியன் இருவரும் கலக்கி உள்ளார்கள்
திருமண வாழ்வில் பெண்களின் எதிர்பார்ப்பை அழுத்தி சொல்லி இருக்கிறார்கள்.

மைனஸ்:
சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் படம் இப்படியா?? என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.
ரொமான்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓவராக உள்ளது என்று கூறுகிறார்கள்.
பெண்களை வைத்து அந்தரங்க விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் ஓவராக உள்ளது.
படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் அதிகமாக உபயோகித்துள்ளார்கள்.
படம் அலசல்:
இந்த படம் முழுக்க முழுக்க ஆண்களுக்கான என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இருக்குமே தவிர மற்றபடி சொல்லும் அளவிற்கு இல்லை. மொத்தத்தில் ‘கேப்மாரி படம் மொள்ளமாரி’ என்னும் சொல்லும் அளவிற்கு உள்ளது. அதே போல இயக்குனர் எஸ் ஏ சி இயக்கிய படங்களில் இது தான் மிகவும் மோசமான படம் என்று கூட சொல்லலாம்.