தமிழில் ஒரு ஏலியின் மூவி – எப்படி இருக்கிறது ஆர்யாவின் ‘கேப்டன்’ – விமர்சனம் இதோ.

0
733
captain
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக ஆர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கேப்டன். இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கி இருக்கிறார். டெடி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சக்தி சௌந்தரராஜன் மற்றும் ஆர்யா கூட்டணியில் இன்று கேப்டன் திரையரங்குகளில் வெளிவந்து இருக்கிறது. ஆக்சன் த்ரில்லர் ஜேனரில் உருவாகி உள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் தி நிறுவனங்கள் தயாரித்து உள்ளது. பல எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள கேப்டன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆர்யா ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். எதிரிகள் எங்கிருந்தாலும், எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும் தன்னுடைய டீமுடன் திறமையாக செயல்பட்டு வீழ்த்தி வருகிறார் ஆர்யா. ஆர்யாவின் தலைமையில் டீமாக ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ், காவியா செட்டி இருக்கின்றனர். பல சவால்களை இந்த டீம் எதிர்கொண்டு இருக்கிறது. பின் மீண்டும் இந்த டீமிடம் ஒரு மிகப்பெரிய மிஷின் ஒப்படைகிறார்கள். அந்த மிஷனின் பெயர் செக்டர் 42.

- Advertisement -

மினரல் தொழிற்சாலை காரணமாக பல வருடங்களாக மூடப்பட்டு மனிதன் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் செக்டர் 42 இடத்தை மீண்டும் இயக்க அரசாங்கம் முடிவு செய்கிறது. அதனை முறையாக கவனித்து நோ அப்ஜக்சன் சர்டிபிகேட் தரும்படி ராணுவத்திற்கு உத்தரவிடப்படுகிறது. இதனால் ஆர்யாவின் டீம் இந்த மிஷினுக்குள் செல்வதற்கு முன்பு மற்றொரு கேப்டன் தலைமையில் ஒரு டீம் செக்டர் 42 உள்ளே போகிறது. ஆனால், அவர்கள் திரும்ப வரவில்லை.

அவர்கள் மட்டும் இல்லாமல் செக்டர் 42 உள்ளே சென்ற பல நபர்கள் மீண்டும் திரும்ப வெளியே வந்ததில்லை. இதனால் இந்த சவாலான காரியத்தை துணிச்சலுடன் ஏற்று ஆர்யா தன்னுடைய டீமுடன் செல்கிறார். செக்டர் 42 உள்ளே செல்லும்போது ஆர்யாவையும் அவரது டீமையும் வினோதமான கிரேசர் தாக்குகிறது. இதன் பின் ஆர்யாவின் டீமுக்கு என்ன நடந்தது? ஆர்யாவின் கண்ணில் பட்டது என்ன? இந்த பிரச்சனைகளை ஆர்யா தன்னுடைய டீமுடன் எப்படி எதிர்கொண்டார்? கடைசியில் செக்டர் 42 இல் நடப்பது என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

வழக்கம்போல் ஆர்யா தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும், ஆக்ஷனும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. ராணுவ வீரனாக ஆர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை அடுத்து ஹரிஷ் உத்தமன் தனது கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களுடன் கோகுல்நாத், பரத்ராஜ், காவியா செட்டி நடிப்பும் அருமையாக இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர் சில காட்சிகள் மட்டும் தான் படத்தில் வருகிறார். அதனால் இவருடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இந்த படம் அர்னால்டு நடிப்பில் John McTiernan இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளிவந்த பிரிட்டேட்டர் படத்தை தழுவி வெளிவந்திருக்கிறது.
ஆனால், பல சுவாரசியத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்லலாம். இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கதையை பயங்கரமாக சொதப்பி இருக்கிறார். கதைக்களம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் திரில்லிங், எக்சைட்மென்ட் காட்சிகள் இல்லை.

பிரிடேட்டர் படத்தில் இருந்த சுவாரஸ்யம் கொஞ்சம் கூட கேப்டன் படத்தில் இல்லை என்று சொல்லலாம். VFX சொதப்பி இருக்கிறது. கொஞ்சம் கூட பார்ப்பதற்கு நம்பக தன்மையே இல்லை. ஏதோ ஒரு கார்ட்டூன் படம் பார்ப்பது போல தான் VFX அமைந்திருக்கிறது. டி இமானின் பாடல்கள் ஓகே என்று தான் சொல்லணும். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பின்னணி இசை இல்லை. ஒளிப்பதிவு படத்திற்கு பக்கமாக உள்ளது. சண்டை காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நிறைகள் :

ஆர்யாவின் நடிப்பு சிறப்பு.

நடிகர்கள் தங்களது கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கதைக்களம் அருமை.

குறைகள் :

இயக்குனர் திரைக்கதையிலும், இயக்கத்திலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திரில்லிங்கான எக்சைட்மென்ட் காட்சிகள் இல்லை.

பிரிடேட்டர் படத்தில் இருந்த சுவாரஸ்யம் கொஞ்சம் கூட கேப்டன் படத்தில் இல்லை.

பின்னணி இசையும் செட்டாகவில்லை.

வி எப் எக்ஸ் சொதப்பல்.

மொத்தத்தில் நீண்ட எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு கேப்டன் படம் பயங்கர ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Advertisement