விஜயகாந்த் பூஜை அறையில் இருக்கும் அந்த மூன்று படம், திருமணத்திற்கு முன் அவர் எடுத்த சபதம் – கேப்டன் பற்றி அறிந்திராத தகவல்.

0
684
vijayakanth
- Advertisement -

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் இவர் மட்டுமில்லாமல் உலக மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் கதாபாத்திரங்களில் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். 20s காலகட்டத்தில் விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். பின் உடல் நலக் குறைவால் சில ஆண்டுகளாக விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தை பற்றிய பல விஷியங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

பூஜை அறையில் எப்போதும் உள்ள 3 படங்கள் :

விஜயகாந்த் தீவிர கடவுள் பக்தி கொண்டவர் சாதி, மதங்களை நம்பாதவர், இதனால் அவரது பூஜை அறையில் இந்து, கிறிஸ்டியன, முஸ்லீம் என மூன்று கடவுள்களின் புகைப்படங்களும் இன்றைக்கும் இருக்கிறது. மேலும் 18 வருடங்களாக சபரிமைக்கு சென்று வந்த இவர் அங்கு இவரை காண வந்த ரசிகர்களினால் தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து சபரிமை போவதை நிறுத்திக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் தனக்கு மனகஷ்டமாக இருக்கும் போது கண்ணனூரில் உள்ள தர்காவிற்கு சென்று வணங்கி வருவதும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

அதோடு தன்னுடைய திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற போது கூட சபரிமை சுவாமி உடையில்தான் சென்றிருந்தார். மேலும், தனது உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் முடித்துவிட்டு தான் பின்னர் திருமணம் செய்துகொள்வேன் என்று சபதம் போட்டுள்ளார் கேப்டன். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போது கூட அவரது குலா தெய்வமான வீர சின்னம்மா கோவிலில் தான் சீட்டு குலுக்கி போட்டு தேமுதிக என்ற பெயரையே வைத்தார். ஏனென்றால் அந்தளவிற்கு கடவுள் பக்தி மற்றும் நல்லநேரம் போன்றவைகளின் மீது நம்பிகை வைத்திருந்தவர் விஜயகாந்த்.

-விளம்பரம்-

50 ஆண்டுகளாக இருந்த கடன் :

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த விஜயகாந்த் ஒருகட்டத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக முன்னணி நடிக்காராக வலம் வந்தார். குறிப்பாக 1999ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டுவரை நடிகர்சங்க தலைவராக இருக்கும் போது 50 வருடங்கள் எம்ஜிஆர், சிவாஜி, ராதாரவி போன்றவர்கள் காலத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வாங்கிய 22 லட்சம் ரூபாய் பணத்தை கட்டமுடியாமல் போனது இதனால் கடன் தொகை “1 கோடியே 25 லட்சமாக” ஆகியது.

கடன் வாங்கிய கப்பலை கரை சேர்த்த கேப்டன் :

இந்த நிலையில் நடிகர் சங்க தலைவரான விஜயகாந்த் ரஜினி, கமல்ஹசன், விஜய், சூர்யா போன்றாவர்களை வைத்து சிங்கப்பூர், மலேஷியா போன்ற இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி 2 கோடியே 50 லட்சம் சேகரித்து நடிகர் சங்க கடனை அடைத்தது போக மீதமிருந்த பணத்தை வங்கியில் செலுத்தி நாடக கலைஞர்களுக்கும், துணை நடிகர்களுக்கு உதவி தொகை கொடுப்பது, நளிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வது என அந்த சங்கத்தை வெற்றியடைய செய்து 50 ஆண்டுகாலமாக இருந்த கடனை அடைத்து விஜய்காந்துடைய மிகப்பெரிய ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

Advertisement