சூர்யா திருமணத்திற்கு நேரில் சென்று அழைத்தும் வரமுடியாதுன்னு மறுத்த விஜயகாந்த்- காரணம் இது தான்

0
320
- Advertisement -

சூர்யா- ஜோதிகா திருமணத்திற்கு விஜயகாந்த் போகாமல் மறுத்த காரணம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பட்டத்தோடு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நபராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சிக் கலைஞர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்.

-விளம்பரம்-

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நலக்குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இருந்தாலும், அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தையும் மற்றும் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

விஜயகாந்த் குறித்த தகவல்:

மேலும், அவர் இல்லை என்றாலும் அவர் புகழ் ஒழித்து கொண்டு தான் இருக்கிறது. அதோடு விஜயகாந்த் குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் கடந்த சில வாரங்களாகவே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர் சூர்யா- ஜோதிகா திருமணத்திற்கு செல்லாத காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக சூர்யா, ஜோதிகா திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சூர்யா ஜோதிகா திருமணம்:

இவர்கள் இருவருமே சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். பின் ஜோதிகா, சூர்யா இருவருமே சேர்ந்து நடிக்கும் போது காதலித்து வந்தார்கள். முதலில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பல போராட்டங்களுக்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஜோதிகா – சூர்யா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணமும் பிரம்மாண்டமாக நடந்தது.

-விளம்பரம்-

சூர்யா-ஜோதிகா திருமணம்:

திருமணத்தில் பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் நடிகர் சங்க தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்திற்கு நடிகர் சிவகுமார் அழைப்பிதழ் கொடுத்திருந்தார். ஆனால், அழைப்பிதழை வாங்கிக் கொண்டு விஜயகாந்த், என்னால் வர முடியாது என்று கூறியிருந்தார். இதை கேட்டு பதறிப்போன சிவகுமார், ஏன்? எதற்கு? என்று கேட்டு இருக்கிறார்.

விஜயகாந்த் வராத காரணம்:

நான் இப்போது தான் கட்சியை துவங்கி இருக்கிறேன். அதை விரிவுபடுத்தும் பணியிலும் இறங்கி இருக்கிறேன். இது பலருக்கு பிடிக்கவில்லை. எப்போது கலகம் செய்யலாம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சூர்யாவின் திருமணத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது. அதனால் தான் நான் திருமணத்திற்கு வர மறுக்கிறேன் என்று கூறி இருந்தார். அதற்குப்பின் திருமணம் முடிந்த பிறகு மணமக்களை நேரில் சந்தித்து விஜயகாந்த் வாழ்த்தி இருந்தார்.

Advertisement