பீர் பாட்டிலால் மாடல் அழகியை தாக்கிய விவகாரம் – புதிய சிக்கலில் நிக்கி கல்ராணி சகோதரி (இப்போ தான் கஞ்சா கேஸ்ல ஜாமின்ல வந்தாங்க)

0
1077
sanjana
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். சமீப காலமாகவே இவர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த ஆண்டு இவர் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிறை தண்டனை பெற்றார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் ஜாமினில் வெளியில் வந்தார். அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பார்ட்டியில் பாடிலால் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி சஞ்சனாவும், வந்தனாவுக்கு இரவு பார்ட்டியில் இருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : ஒரு தொகுதியில் கூட ஜெய்க்காததுக்கு காரணமே இதான் – கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. MNMதின் அடுத்த எலிமினேஷன்.

- Advertisement -

இதனால் சஞ்சனா விஸ்கி பாட்டிலை தூக்கி தன்னை தாக்க வந்ததாக வந்தனா, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் சஞ்சனாவை போலீசார் அழைத்து விசாரித்தனர். இதுகுறித்து விளக்கமளித்த சஞ்சனா, எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால், நான் வந்தனாவை பாட்டிலால் தாக்கவில்லை.தேவை இல்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். இதனால் நான் மிகவும் நொந்து போய் உள்ளேன் என்று கூறியிருந்தார்.

Image result for vandana jain

ஆனால், சஞ்சனா மீது புகார் அளித்த வந்தனா, சஞ்சனா கல்ராணி தாக்கியதில் வந்தனா ஜெயினுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாக அவர் மீது புகார் அளித்தார். புகார் அளித்து இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வந்தனா ஜெயின் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வந்தனாவின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கப்பன் பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டது, இதை தொர்ந்து கப்பன் பார்க் போலீசார், நடிகை சஞ்சனா மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement