படத்த பத்தி ஒழுங்கா சொல்லனும்னா காசு குடு.! ப்ளூ சட்டையின் பித்தலாட்டம்.!

0
640

ஒரு திரைப்படத்தை எடுக்க பட குழுவினர் எந்த அளவிற்கு கஷ்டபடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால், ஒரு படத்தின் பல மாத உழைப்பை வெறும் ஒரு சில நிமிடத்தில் விமர்சனம் என்ற பெயரில் அந்த படத்தை நாறடித்து விடுகின்றனர்.

யூடுயூபில் இதுபோன்ற 100 கணக்கான விமர்சர்கள் இருக்கின்றனர். அதில் மிகவும் முக்கியமான நபர்களில் ஒருவர் தமிழ் டால்கிஸ் சேனலை சேர்ந்த ப்ளூ சட்டை மாறன். இதுவரை இவர் அளித்த பெரும்பாலான விமர்சனங்கள் அனைத்தும் எதிர்மறையானதாக தான் இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் இவர் சமீபத்தில் கிழித்து தொங்கவிட்ட படம் தான் ‘சார்லி சாப்ளின் 2’. இந்நிலையில் படத்திற்கு ஒழுங்காக விமர்சனம் கொடுக்க வேண்டும் என்றால் பணம் தருமாறு மிரட்டியதாக ப்ளுசட்டை மாறன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சார்லி சாப்ளின் 2 படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் .

அந்த புகாரில் படத்திற்கு விளம்பரம் செய்யவும், விமர்சனம் அளிக்கவும் பணம் கேட்டு மிரட்டினார் ப்ளுசட்டை மாறன். ஆனால், படக்குழு பணத்தை தரமறுத்ததால் சார்லி சாப்ளின் 2 படத்தை மிக மிக் தரக்குறைவான வகையிலும் ஒருமையிலும் பேசி விமர்சனம் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement