தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டு இருந்தவர் நடிகர் பால கிருஷ்ணா. 90 கால கட்டங்களில் டோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் பால கிருஷ்ணா திகழ்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமாராவ் அவர்களின் மகன் ஆவார். மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக ‘தாத்தம்மா கலா’ என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் 1982 ஆம் ஆண்டு வசுந்தரா தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
மேலும், பாலா கிருஷ்ணா அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். சமீபத்தில் கூட கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிய “ரூலர்” என்ற படத்தில் இவர் நடித்து இருந்தார். 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் அதற்கு பிறகு வேறு மொழி படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். 2016 ஆம் ஆண்டு கன்னட படத்தையும், 2018 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு படத்தையும் இயக்கினார். அந்த தெலுங்கு படத்தில் தான் பால கிருஷ்ணா அவர்கள் நடித்து இருந்தார். இந்த படம் பால கிருஷ்ணனின் 105 வது படமாகும்.
இதையும் பாருங்க : 6 மணி நேரம் துடி துடித்து இருந்தான். சாய்பிரசாந்தின் மரணம் குறித்து பேசிய பிரபல நடிகர்.
மேலும், இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது. இதற்கு அடுத்து நடிகர் பால கிருஷ்ணா அவர்கள் நடிக்கும் புது படத்திற்காக கதாநாயகியை தீவிரமாக தேடி வருகின்றனர் படக்குழுவினர். பால கிருஷ்ணாவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவிடம் கேட்டு உள்ளார்கள் படக்குழுவினர். ஆனால், அதற்கு நடிகை சோனாக்ஷி அவர்கள் வயதான நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம். இதனை தொடர்ந்து பல நடிகைகளிடம் கேட்டு வருகின்றனர்.
ஆனாலும், பல நடிகைகள் ஒவ்வொரு காரணங்கள் சொல்லி நடிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து விட்டாராம். இந்நிலையில் நடிகை கேத்ரின் தெரசாவை பால கிருஷ்ணாவுக்கு கதாநாயகியாக நடிக்க முடியுமா? என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு நடிகை கேத்ரின் தெரசா இந்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால் எனக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்றும் கேட்டு உள்ளாராம். இதனால் மொத்த டோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உள்ளது. பாலிவுட், டோலிவுட் என அனைத்து தரப்பு சினிமா துறையில் உள்ள நடிகர்களிடம் கேட்டு வருகிறார்கள். என்ன தான் நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம். அதோடு சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.