விஷாலை தான் விசாரிக்கனும், பகீர் கிளப்பிய முன்னாள் உறுப்பினர். புதிய தலைவலியில் விஷால்.

0
926
- Advertisement -

மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி ரிலீஸ்க்கு தணிக்கை குழுத்து லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்திருக்கிறேன் என்று விஷால் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் மார்க் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் ரவி, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மார்க் ஆண்டனி படம்:

இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டில் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் படத்தின் நாயகன் விஷால், எஸ் ஜே சூர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் இயக்குனர் கொண்டிருந்தார்கள்.

விஷால் வெளியிட்ட வீடியோ:

இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் வெளியிட பாலிவுட்டில் உள்ள தணிக்கை குழுவுக்கு 6.5 லட்சம் ரூபாய்யை லஞ்சம் கொடுத்ததாக விஷால் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் அந்த பணத்தை இரண்டு தவணை முறைகளாக கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து கருத்து போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் கூறியது:

அந்த வகையில் மகாராஷ்டிரா முதலமைச்சர், பிரதமர் மோடி ஆகியோர் லஞ்சம் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். மேலும், இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் கூறி இருப்பது, விஷாலுக்கு நடந்தது மிகவும் கஷ்டமான சம்பவம். ஊழலை இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்தான விசாரணையை மேற்கொள்ள மூத்த அதிகாரி மும்பைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

முன்னாள் உறுப்பினர் அசோக் பண்டித் கூறியது:

இதனை அடுத்து இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் முன்னாள் உறுப்பினர் அசோக் பண்டித் கூறியிருப்பது, படங்களில் வேண்டுமானால் லஞ்சம் வாங்குவது காண்பிக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அது நடக்காத காரியம். இதை விஷால் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக அரசு அலுவலங்களில் இது நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லஞ்சம் வாங்கியவர்கள் தணிக்கை குழுவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இல்லை. ஆகையால், பணம் கொடுக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

Advertisement