BTSக்கு அடிமையாகும்கல்லூரி மாணவிகள் – பெற்றோருக்கு ஷாக் கொடுத்தஇளம் பெண். எச்சரிக்கும் நிபுணர்கள்

0
424
- Advertisement -

இளம் தலைமுறைகள் பிடிஎஸ் இசைக்கு அடிமையாகி நாசமாகி போகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே இசை என்றால் மக்களின் மனதை கட்டி போட கூட விஷயம். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான் தொடங்கி அனிருத், யுவன் சங்கர் ராஜா என்று தற்போது வரை ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் காலத்திற்கு ஏற்றவாறு இசைகளை மக்களுக்கு விருந்தாக கொடுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதிலும் இன்றும் இளையராஜாவின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் இருக்கிறது. ஆனால், 2k கிட்ஸ் தான் இளையராஜா பாடலை பழசு என்று ஒதுக்கி பிடிஎஸ் மோகத்தில் சுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் பி டி எஸ் மோகம் தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

பி டி எஸ் இசை குழு:

கொரியன் இசைக் குழுவைதான் பிடிஎஸ் என்பார்கள். இந்த இசை குழுவை சேர்ந்தவர்கள் RM, Jin, suga, j hope, jimin, v, Jung kook என மொத்தம் ஏழு பேர் இருக்கிறார்கள். இவர்கள் தான் இந்த பிடிஎஸ் இசை குழுவுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் கண்ணைக் கவரும் வகையில் கலர் கலரான உடை, வித்தியாசமான ஹேர் ஸ்டைல் என்று தற்போது இருக்கும் இளசுகளுக்கு ஏற்றவாறு தங்களின் தோற்றத்தை மாற்றி பாடி வருகிறார்கள்.

பி டி எஸ் இசை குழுவால் ஏற்படும் விளைவு:

தற்போது இவர்களுடைய இசைக்கு உலகம் முழுவதும் பல பேர் அடிமையாகி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதை இவர்கள் ஆரம்பத்தில் ஒரு பொழுதுபோக்கிற்காக தான் ஆரம்பித்தார்கள். இவர்களுடைய இசை கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலமானது. ஒரு கட்டத்தில் இவர்களின் இசை மிகப்பெரிய அளவிற்கு மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சொல்லப்போனால், பிடிஎஸ் ஆல் மனநல மருத்துவரிடம் செல்லும் அளவிற்கு பிரச்சனை முற்றி இருக்கிறது.

-விளம்பரம்-

பெண் செய்த வேலை:

அதாவது, சமீபத்தில் ஒரு பெண் பி டி எஸ் பாடலுக்கு அடிமையாகி இருந்ததால் திருமணம் செய்தால் கொரியன் மாப்பிள்ளை தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதை அடுத்து அவரை மனநல ஆலோசர்களிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் அவர் அதில் இருந்து விடுபட்டு இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் மொபைல் போன் தான்.

ஆலோசகர் அறிவுரை:

அதில் அவர்களுக்குத் தேவையானது கிடைப்பதால் அதிலேயே மூழ்கி விடுகிறார்கள். இதனால் பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களுடைய பிள்ளைகளிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள். ஏதேனும் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பார்க்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை கவனியுங்கள். சமீப காலமாக பிடிஎஸ் இசைக்கு இளம் நபர்கள் அடிமையாகுவதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் பல பேருடைய வாழ்க்கை சீரழிந்தும் வருகிறது. பெற்றோர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

Advertisement