காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பான “செக்க சிவந்த வானம்” என்ற படம் உருவாகி வருகிறது. சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்களை வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து ஒரு முக்கிய நடிகர் விலகிவிட்டார்.
லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதி ராவ் மற்றும் காக்க முட்டை புகழ் ஐஸ்வ்ர்யா ராஜேஷ் நடித்துவருகின்றனர்.மேலும் படத்தின் இசையை இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கில் நவாப் என்றும் டப் செய்யப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் இந்த படம் வெளியாக உள்ள இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து வந்த அரவிந்த் சாமி இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . அது வேறு ஒன்றும் இல்லை அந்த படத்தில் தனது கதாபாத்திரத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதால் தனது அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விட்டார் நடிகர் அரவிந் சாமி.
இதையடுத்து தற்போது அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் த ராஸ்கல் திரைப்படத்தின் ப்ரோமோ வேலைகளுக்காக கிளம்பி விட்டாராம். இந்த படம் வரும் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் தேறி படத்தில் நடித்த பேபி நைனிகா மற்றும் தர்மதுரை படத்தில் நடித்த குட்டி பையனும் நடித்துள்ளனர்