சிவகார்த்திகேயன் முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை மொட்டை போட்டுள்ள சலூன் கடைகாரர். வைரலாகும் வீடியோ.

0
339
mottai
- Advertisement -

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளுக்கு மொட்டை போட்டது போல போட்டோஷாப் செய்த புகைப்படத்தை வேளாங்கண்ணி சலூன் கடைக்காரர் விளம்பரமாக வைத்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் கடை தெருவிற்கு செல்லும் போது லோக்கல் கடைகளில் உள்ள போர்டுகளில் நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் இருப்பது வழக்கம். பொதுவாகவே சினிமா பிரபலங்கள் மூலம் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் அதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும்.

-விளம்பரம்-

மேலும், கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி போர்டுகளில் பிரபல நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வைத்திருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் கடை உரிமையாளர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அந்த நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து எடிட் செய்து வைத்து இருப்பார்கள்.

- Advertisement -

நடிகர்களுக்கு மொட்டை போட்ட சலூன் காரர்:

இப்படி ஒரு நிலையில் நடிகர் நடிகைகளின் புகைப்படங்களில் தலையை மொட்டை அடிப்பது போல் புகைப்படத்தை எடிட் செய்து சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையில் வெளியே விளம்பரத்துக்காக வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும், கடைகளிலும் சினிமா நடிகர் நடிகைகளின் புகைப்படத்தை பயன்படுத்துவார்கள்.

விளம்பரங்களில் நடிகர் புகைப்படங்கள்:

துணி கடை, நகைக் கடை, சலூன் கடை, பட்டாசு கடை உள்ளிட்ட பல கடைகளில் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை வைத்து விளம்பரம் செய்வார்கள். அதிலும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்களின் புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில் சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையை விளம்பரப்படுத்தும் நோக்கில் தனது மொத்த வித்தையையும் காட்டி உள்ளார்.

-விளம்பரம்-

மொட்டை போட்ட நடிகர்,நடிகைகளின் புகைப்படங்கள்:

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீதிவ்யா, பூனம் பஜ்வா, சினேகா ஆகியோரின் புகைபடங்களில் மொட்டை தலையுடன் இருப்பது போல எடிட் செய்து கடைகளின் வெளியே பேனராக வைத்துள்ளார். மேலும், இந்த வீடியோ வேளாங்கண்ணியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு செல்லும் வழியில் பக்தர்கள் அங்கு மொட்டை போடுவது உண்டு. அதனால் பக்தர்களை கவர பிரபலங்களுக்கு மொட்டை போட்டு வைத்துள்ளார் சலூன் கடைக்காரர்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விளம்பரத்துக்காக இப்படியா பண்ணுவீங்க? என்று கிண்டல் செய்தும் ஏராளமான மீம்ஸ்களை அள்ளிப் போட்டும் வருகின்றார்கள். அதோடு இந்த வீடியோவை பார்ப்பவர்களை குபீர் சிரிப்பிற்குள்ளாக்கி வருகிறது.. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement