தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால்,
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாக தாமதமாகிறது. பின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. இதை அடுத்து படத்தினுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஜனநாயகன் படம்:
மேலும், படத்திற்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தணிக்கைக்காக படக்குழு அனுப்பி இருந்தது. அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை தொடர்ந்து படத்தை பார்த்தது சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மீட் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதற்கு பிறகு தணிக்கை குழு உறுப்பினர்கள் சொன்ன மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தணிக்கை குழுக்கே அனுப்பி இருந்தது. இருந்தாலுமே படத்துக்கான தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.
படம் வெளியாக ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் தணிக்கை சான்று கிடைக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.
https://www.youtube.com/watch?v=a5oqmbg7Jes
படம் ரிலீஸ் சர்ச்சை :
விசாரணையில் தணிக்கை குழுவில் 5 நபர்களில் நான்கு பேர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஒருவர் மட்டும் தான் ஆட்சபனை தெரிவித்து மறு ஆய்வுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். பின் இந்த சென்சார் சர்ச்சை நீண்டு கொண்டே வருகிறது. ரசிகர்கள் எல்லோரும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். மேலும், நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு மறு தணிக்கை செய்ய படக்குழு அறிவித்து இருக்கிறது. ரிவைசிங் கமிட்டி படத்தை பார்த்து சென்சார் சான்றிதழ் தந்தால் ரிலீஸ் தேதியை அறிவிப்பதாக படக்குழு எதிர் பார்த்துக் கொண்டிருந்தது.

சென்சார் விவகாரம்:
இதையடுத்து கடந்த வாரமே ரிவைசிங் கமிட்டி படத்தை பார்ப்பதாக தகவல் வந்தது. ஆனால், ரிவைசிங் கமிட்டி குழுவில் உள்ள ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இந்த படத்தை பார்க்க தாமதமானது. இந்நிலையில் தற்போது விஜய் உடைய ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலருமே படத்தினுடைய ரிலீஸ் தேதிக்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.






