கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.
மேலும், சீரியல் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு கூட பல்வேறு கட்டுப்படுங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சினிமா ஷூட்டிங் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் வெளியிட்டுள்ளார்.
அதில்,
1. படப்பிடிப்புதளம், மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சானிடைசர் கட்டாயமாக வைக்க வேண்டும்
2. படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் உடல்வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்
3. . பார்க்கிங், படப்பிடிப்பு இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
4. படப்பிடிப்பு இடங்களை அடிக்கடி தூய்மை படுத்தவேண்டும்
5. யாருக்காவது கொரோனா உறுதியானால் படப்பிடிப்புதளத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
6. குறைந்தளவு பணியாளர்களை கொண்டே படப்பிடிப்பு நடத்தப்படவேண்டும்
7. . படப்பிடிப்பு அரங்கு, ஒப்பனை அறை மற்றும் கழிப்பறைகள் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும்
8. கேமிராவுக்கு முன்பு நடிக்கும் நடிகர்களை தவிர மற்ற அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்
9. உடைகள், விக், ஒப்பனை பொருட்கள், லேபல் மைக் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்
10.ஒப்பனை கலைஞர்கள், சிகை அலங்கார கலைஞர்கள் முழு உடல்கவச உடைகள் அணிவது கட்டாயம்.