சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்காதது இதுதான் காரணம்.! சிம்ரன் ஓபன் டாக்

0
2645
Simran
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது.

-விளம்பரம்-

chandramukhi

- Advertisement -

இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார். மேலும், அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

நடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சிம்ரன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்னவெனில் நடிகை சிம்ரன் அந்த படத்தில் ஒரு சில நாட்கள் நடித்து வந்தாராம். ஆனால், அப்போது தான் சிம்ரன் கற்பாக இருக்கிறார் என்ற விடயம் தெரியவர அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். சிம்ரனின் நிலைமையை புரிந்து கொண்டு இயக்குனர் பி வாசுவும் சிம்ரன் படத்தில் இருந்து விலக சம்மதித்துவிட்டாராம்.

-விளம்பரம்-

simran

சிம்ரன் விஜய், அஜித், கமல் என்று அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். ஆனால், ரஜினியுடன் நடிக்காதது தான் ஒரு குறையாகவே இருந்து வந்தது. ஆனால், தற்போது நடிகை சிம்ரன் , கார்த்திக் சுப்புராஜ் இயக்கித்தில் ரஜினி நடித்து வரும் “பேட்ட ” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement