சந்திரலேகா தொடரில் இருந்து விலகிய அருண் – அவரே வெளியிட்ட தகவல். இனி அவருக்கு பதில் இந்த நடிகர் தானாம்.

0
504
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் வெள்ளித்திரை படங்களுக்கு இணையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் கொரோனோ தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை சீரியல்களை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் தொடர்களின் மூலம் சின்னத்திரை நடிகர்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அருண் ராஜன். இவர் மயிலாடுதுறையை சேர்ந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மீடியாவுக்குள் நுழைந்தார்.பின் 2010 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரின் மூலம் தான் தொலைக்காட்சி துறைக்கு நடிகராக அருண் அறிமுகமானார்.

- Advertisement -

அருண் ராஜனின் சின்னத்திரை பயணம்:

அதனைத் தொடர்ந்து துறைக்கு அழகி, வாணி ராணி, சந்திரலேகா, கல்யாண பரிசு, பிரியசகி, சந்திரகுமாரி, பூவே உனக்காக போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் எட்டு வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர் சந்திரலேகா. இந்த தொடரில் சபரிநாதன் என்ற கதாபாத்திரத்தில் அருண் ராஜன் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே சேர்ந்திருக்கிறது. மேலும், இவர் தொலைக்காட்சி நடிகர் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.

சோசியல் மீடியாவில் அருண் ராஜன்:

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளர் என்ற விருதையும் அருண் வாங்கி தொகுப்பாளர். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இவர் பதிவிட்டு வருவார். இவரை லட்சக்கணக்கான பேர் சோசியல் மீடியாவில் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனைக்கு இவர் குரல் கொடுத்தும் வீடியோ பதிவு உள்ளார்.

-விளம்பரம்-

அருண்ராஜன் செய்த சமூக சேவை:

சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஜெய்பீம் படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அதற்கு அருண் குரல் கொடுத்து வீடியோ போட்டு இருந்தார். இப்படி இவர் நடிப்பது மட்டுமில்லாமல் பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சாலையில் மேடு பள்ளமாக குண்டும் குழியுமாக இருந்த ரோட்டை பார்த்து மம்பட்டி எடுத்து மேடு பள்ளமாக இருக்கும் சாலையை தன்னால் முடிந்த வரை சீர் செய்திருக்கிறார். இதை பார்த்து விட்டு கடந்து போக மனது வரவில்லை. இது நம்முடைய கடமை என்று குறிப்பிட்டிருந்தார்.

சீரியலில் இருந்து விலகிய அருண்ராஜன்:

இந்நிலையில் அருண் ராஜன் அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அது என்னவென்றால், பல ஆண்டுகலாக நடித்து வரும் சந்திரலேகா சீரியலிருந்து அருண் ராஜன் வெளியேறி இருப்பதாக கூறி இருக்கிறார். இவர் வெளியேறியது குறித்து பலரும் வருத்தமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், இவருக்கு பதிலாக அந்த தொடரில் சபரி என்ற கதாபாத்திரத்தில் அருண் என்ற வேறு ஒரு நடிகர் நடிக்க இருக்கிறார். இவரும் பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement