இவனுக்கு இவனே தான் வில்லன்.! சார்லி சாப்ளின் 2 படத்தின் விமர்சனம்.!

0
1560
Charlie-Chaplin-2
- Advertisement -

சார்லி சாப்ளின் படத்தைத் தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- சார்லி சாப்ளின் 2
இயக்குனர்:- ஷக்தி சிதம்பரம்
நடிகர்கள் : – பிரபு தேவா, நிக்கி கல்ராணி, பிரபு, அதா ஷர்மா, அமித் பார்கவ்
தயாரிப்பு : – 
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம்
இசையமைப்பளார் :- அம்ரீஷ் கணேஷ்
வெளியான தேதி : 25-01-2019

- Advertisement -

கதைக்களம்:

படத்தின் ஹீரோவான பிரபுதேவா கல்யாண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால், அவருக்கு தான் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் போய் விடுகிறது. பின்னர் பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை சந்தித்து காதலில் விழுகிறார். ஒழுங்காக செல்லும் காதலில் அதா ஷர்மாவால் பிரச்சனை ஏற்படுகிறது. பிரபு தேவா தவறு செய்யவில்லை என்பதை அறியாத நிக்கி கல்ராணி அவரை அடிக்கடி சந்தேகபட்டுக்கொண்டே இருக்கிறார்.

இறுதியில் எப்படியோ நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும்போதும், அங்கு போய்ச் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின் 2’. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்.

பாசிடிவ் :

-விளம்பரம்-

கமர்சியல் படம் என்பதால் இதில் நீங்கள் அவ்வளவாக கவனிக்கபோவது இல்லை. மேலும், படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவர்க்கு ப்ளஸஸும் இல்லை. ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் என்றால் படத்தின் பாடல்கள் மட்டும் தான். மேலும், பிரபுதேவாவின் நடனம் வழக்கம் போல ஒரு ட்ரீட் தான்.

நெகடிவ் :

முன்பு சொன்னது போலவே இது கமர்சியல் படம் தான் என்றாலும் படத்தில் ஏகப்பட்ட குறைகள். முதல் பாகத்தை போன்றே கதைக்களம் என்றாலும் முதல் பக்கத்தில் இருந்த காமெடி பாதி அளவில் கூட இல்லை. பெரும்பாலான இடங்களில் உங்களுக்கு சீரியல் பார்ப்பது போல தான் இருக்கும். அதிலும் திருப்பதியில் நடக்கும் காட்சிகல் நீங்கள் சீரியல் பார்ப்பது போல தான் இருக்கும். படத்தில் பிரபுவிற்கு நிறைய ஸ்கோப் கொடுத்து போல தெரியவில்லை.

இறுதி அலசல் :

பஞ்ச தந்திரம், காதலா காதலா போன்ற படங்களுக்கு நிகராக முழு நீள காமெடி படமாக இதனை நீங்கள் எதிர்பார்த்து போனால் நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றம் தான்.ஆனால், குடும்பத்துடன் சென்று கொஞ்சம் சிரித்தாள் போதும் என்பவர்களுக்கு இந்த படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான். மொத்தத்தில் இந்த படத்திற்கு நமது இணையதளத்தின் மதிப்பி 5/10.

Advertisement