என்ன விட மாட்டையா டா.! தொல்லை செய்த ரசிகரை விக்ரம் என்ன செய்தார் பாருங்க.! வைரலாகும் வீடியோ.!

0
15480
Vikram
- Advertisement -

விக்ரமின் கடாரம் கொண்டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விக்ரம் ஆந்திராவிற்கு சென்று இருந்தார். அப்போது பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் விக்ரம். அப்போது கோயம்புத்தூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் விக்ரமை தமிழில் பேச சொல்லி அன்புத் தொல்லை செய்து வந்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், விக்ரம் இங்கு இருப்பவர்கள் அனைவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதனால் நான் கொஞ்சம் தெலுங்கில் பேசுகிறேன் பின்னர் தமிழில் பேசுகிறேன் என்று கூறினார். அதன் பின்னரும் அந்த ரசிகர் விக்ரமை தமிழில் பேச சொல்லி தொல்லை செய்து கொண்டே இருந்தார்.

இதையும் பாருங்க : அட பாவமே, சந்தனமா இது.! FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.! உச்சு கொட்டும் ரசிகர்கள்.! 

- Advertisement -

இதற்கு சற்றும்கோபப்படாத விக்ரம் என்னை விட மாட்டியா டா நீ என்று சிரித்தபடி அந்த ரசிகரை கூற பின்னர் அந்த ரசிகரை ஒரே ஒருமுறை நான் உங்கள் அருகில் நிற்க வேண்டும் என்று கூறினார் அதற்கு விக்ரமும் இங்கே கொஞ்ச நேரம் வந்தது என்றால் உனக்கு போதும் தானே என்று அந்த ரசிகரை மேடையில் அழைத்தார்.

பின்னர் மேடைக்கு வந்த அந்த ரசிகரை கை கூப்பி வரவேற்று அங்கிருந்த அனைத்து நபர்களுக்கும் கை கொடுக்க வைத்தார். விக்ரமின் இந்த செயலை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர் மேலும் மேடையில் இருந்தவர்களும் இதனால் தான் உங்களை அனைவருக்கும் பிடிக்கின்றது என்று மிகவும் நெகிழ்ச்சியாக கூறினர். விக்ரமின் இந்த குணம் தான் அவரை தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு சிறந்த நடிகராக வைத்திருக்கிறது என்றால் அது மிகை ஆகாது

-விளம்பரம்-

Advertisement