அட பாவமே, சந்தனமா இது.! FaceApp பயன்படுத்தாமே இப்படி ஆகிட்டார்.! உச்சு கொட்டும் ரசிகர்கள்.!

0
6578
santhanam

காமெடியனாக திரையுலகில் காமடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’,  ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. 

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் தற்போது ‘A1’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் கூட வெளியானது.

இதையும் பாருங்க : பிக் பாஸ்ஸால் TRP-யில் நெருங்க முடியாத உச்சத்தை தொட்ட விஜய் டிவி.! எவ்ளோ வித்யாசம் பாருங்க.! 

இந்த நிலையில் சந்தானத்தின் சமீபத்திய புகைப்படம் வெளியாகை ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. அதற்கு முக்கிய காரணமே அந்த புகைப்படத்தில் நடிகர் சந்தானம் படு ஒல்லியாக மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். இதனால் அவருக்கு எதாவது வியாதியா என்று ரசிகர்கள் என்னும் அளவிற்கு சந்தானம் தோற்றமளிக்கிறார்.

சமீப காலமாக பிரபலங்கள் அனைவரும் faceapp என்ற செயலியை பயன்படுத்தி தாங்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்று புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சந்தானத்தின் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் Faceapp பயன்படுத்தாமலேயே இப்படி இருக்கிறாரே என்று மிகவும் பரிதாபப்பட்டுள்ளனர்.

ஆனால், தனது உடல் எடை குறைந்துவருவது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய சந்தானம், படத்திற்காக தான் இப்படி உடல் எடையை குறைத்து வருகிறேன். அதன் பின்னர் மீண்டும் நன்றாக சாப்பிட்டு பழையபடி ஆகிவிடுவேன் என்று கூறியிருந்தார். இருப்பினும் சந்தனத்தை இந்த கோலத்தில் பார்க்க யாரும் விரும்பவில்லை என்பது தான் உண்மை.