101 கிலோவில் இருந்து 71 கிலோ. சிம்புவின் இந்த அதிரடி மாற்றத்திற்கு என்ன காரணம் ? இது எப்படி நடந்தது தெரியுமா ?

0
1068
simbhu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து வந்தார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இது ஒருபுறம் இருக்க நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சிம்புவின் உடல் எடை குறைந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். இந்த நிலையில் சிம்புவின் இந்த மாற்றம் குறித்து அவரது நண்பரும் நடிகருமான மஹத், மற்றும் சிம்புவின் ஜிம் கோச் பேட்டி அளித்துள்னனர். சொல்லப்போனால் மஹத்தின் உடலை பார்த்து தான் சிம்பு , மஹத்தின் பயிற்சியாளர் சந்தீப் என்பவரை சந்தித்து உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் அளித்த பேட்டியில், சிம்புவுக்கு பயிற்சி கொடுத்தது சற்று வித்தியாசமான அனுபவம். மற்றவர்கள் போல ஒரே பயிற்சியை அவர் திரும்ப திரும்ப செய்ய விரும்பவில்லை. அதனால் அவருக்கு நான் விதவிதமான பயிற்சிகளை கொடுத்தேன். காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து நடைபயிற்சி செய்வார். பின்னர் ஜிம்மில் வொர்க்கவுட். இவை தவிர்த்து அவரின் உடல்வலிமை அதிகரிக்க பிரேத்யக பயிற்சியும் கொடுக்கப்பட்டது. வாரத்தில் 4 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட சிம்பு தற்போது 5 நாட்கள் பயிற்சி செய்கிறார். இவைத் தவிர்த்து அவர் விளையாடுவதிலும் கவனம் செலுத்தினார்.ஊரடங்கால் அவரின் எடை அதிகரித்து விட்டது. அதன் பின்னர் ஜீன் மாதம் மீண்டும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். கடினமாக பயிற்சி செய்து தற்போது 71.1 கிலோ எடை கொண்ட சிம்புவாக மாறி நிற்கிறார்.

அவர் பற்றிய வதந்திகள் இங்கு உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவருடன் பணியாற்றிய போது அவர் கடினமான உழைப்பாளி என்பது தெரியவந்தது.முதற்கட்டமாக துரித உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து அல்கலைன் நிறைந்த உணவுகளையும், அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக்கொண்டார். அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் தவிர்த்த சிம்பு, சில சமயங்களில் திரவ உணவுகளையும் எடுத்துக்கொண்டார். இந்தச் சின்ன சின்ன விஷயங்கள் தான் இன்று அவரின் உடல் எடையில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவருக்கான எல்லா உணவுகளையும் அவரே சமைத்தார்.

-விளம்பரம்-
Advertisement