சினிமாக்களை பொறுத்த வரை படத்தின் நீளம் கா ரணமாகவும், ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளவதாலும் ஒரு சில காட்சிகள் நீக்கபட்டு விடுகின்றனர். நாம் ட்ரைலரில் பார்க்கும் சில காட்சிகள் படத்தில் இடம்பெறுவது இல்லை. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “செக்க சிவந்த வானம்” படத்திலும் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாக வெளியான முதல் ட்ரைலரில் அரவிந்த் சாமியிடன், நடிகை ஜோதிகா ‘அப்போ, யுத்தம் தான். முடிவு பண்ணிடீங்கள்ள’ என்று கூறும் காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால், திரைப்படத்தில் ஜோதிகா பேசும் இந்த வசனம் இடம்பெறவில்லை.
இதற்கு முக்கிய காரணமே ட்ரைலரில் இடம்பெற்ற ஜோதிகாவின் இந்த குறிப்பிட்ட ட்ரைலர் வெளியான போது மிகவும் கலாய்க்கபட்ட போது மீம் கிரேட்டோர்கள் இந்த வசனத்தை கலாய்த்து மீம்களை கூட பரப்பி வந்தனர். இதனாலேயே இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
இதே போல விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான “சாமி 2” படத்தின் பல்வேறு காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போது விக்ரம் பேசிய பல மாஸ் வசனங்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தது என்று பலரும் கலாய்த்து வந்தனர். அதே போல இந்த படத்தில் சூரி நடித்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் சோதித்து என்று அந்த கட்சிகளையும் படத்தில் இருந்து நீக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.