இயக்குனர் ஆனந்த் சிவம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் செல்லமடா நீ எனக்கு. இந்த படத்தில் வசீகரன், நேகா, போஸ் வெங்கட், பசங்க செந்தி, அமுதவாணன், மீரா கிருஷ்ணன், நிஷா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். காதல், குடும்பக் கதையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ வசீகரன், தன்னைப் பெற்றெடுத்து வளர்த்த தாய் செந்தியை ரொம்பவே வெறுக்கிறார். அதற்கு காரணம், தாயின் நடத்தை என்று சொல்லப்படுகிறது. தாயிடம் பாசம் கிடைக்கவில்லை என்றாலும்
ஹீரோயின் காதலியின் மூலம் வசீகரனுக்கு பாசம் அன்பு கிடைக்கிறது. பின் ஹீரோ, தாயை வெறுக்கும் விஷயத்தை அறிந்த காதலி எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், ஹீரோ கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் கோபப்பட்ட ஹீரோயின், வசீகரின் கன்னத்தில் அறைந்து அவருடைய தாய் செய்த தியாகத்தை எல்லாம் சொல்கிறார். கதை பல வருடங்களுக்கு முன்பு நகர்கிறது. அதற்குப் பிறகு தாய்- மகன் இருவரும் இணைந்தார்களா? தன் தாயின் மீது மகன் வெறுப்பை காண்பிக்க காரணம் என்ன? ஹீரோ- ஹீரோயினி சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
படத்தில் ஹீரோ வசீகரன் தாயை வெறுக்கும் காட்சிகளிலும், காதலியிடம் அன்பாக நடந்து கொள்ளும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோ தன்னுடைய நடிப்பின் மூலம் படத்தை முழுவதும் தன் தோளில் தாங்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். அழுகை, காதல், எமோஷனல், கோபம் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவரை அடுத்து கதாநாயகி வரும் நேகாவும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில் தாயாக நடித்திருக்கும் பசங்க செந்தி மகனின் பாசத்துக்காக ஏங்கி தவிக்கும் காட்சிகள் எல்லாம் கண்கலங்க வைத்திருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்கள். தாயின் ஒழுக்கத்தை சந்தேகப்பட்டு ஒரு மகன் வெறுக்கும் காட்சிகளும் உண்மை அறிந்து தன் தாயின் பாசத்துக்காக ஏங்கும் காட்சியும் அற்புதமாக இருக்கிறது.

படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. இயக்குனர் ஒரு மென்மையான உணர்ச்சிப்பூர்வமான கதையை அமர்க்களம் இல்லாமல் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சில இடங்களில் கதை மெதுவாக நடந்தாலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து இருக்கிறது. குடும்பமாக சேர்ந்து எல்லோரும் பார்க்கும் படமாக இருக்கிறது. மொத்தத்தில்
செல்லமடா நீ எனக்கு ஒரு நல்ல முயற்சி.
நிறை:
ஹீரோ ஹீரோயின் நடிப்பு
கதைக்களம் அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
எமோஷனல் காட்சிகள் நன்றாக இருக்கிறது.

குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் கதை பொறுமையாக நகர்கிறது
மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் 'செல்லமடா நீ எனக்கு' - பாச போராட்டம்






