அட்லீயும் இல்ல, விஜய் சேதுபதியும் இல்ல – அஜித்துடன் இருக்கும் இந்த பிரபலம் இந்த சென்னை 28 பட நடிகர் தானா ?

0
1809
- Advertisement -

தல அஜித்தின் இளம் வயது புகைப்படத்தில் அவருடன் இருக்கும் பிரபல நடிகர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. ஆனால், அந்த வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. மேலும், வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

துணிவு படம்:

மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூறியிருந்தனர். அதோடு இந்த படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது.

ஏகே 62 படம்:

பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

அதில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக அஜித்- திரிஷா இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் புனேவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

வைரலாகும் அஜித் புகைப்படம்:

இந்நிலையில் நடிகர் அஜித்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் அஜித்துடன் நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி போல இருக்கிறார் என்று சிலரும் இல்லை, இல்லை இது அட்லீ என்றும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாக்கி இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர் விஜய் சேதுபதி இல்லை. சென்னை 28 படங்களில் நடித்த நடன இயக்குனரும், நடிகருமான அஜய் ராஜ் தான்.

Advertisement