எம்ஜிஆர் மாதிரி விஜய் இதை செய்யணும்,ஆனா ரஜினிம் – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

0
1574
Mgr
- Advertisement -

எம்ஜிஆர், விஜய் மாதிரி நடிகர் ரஜினிகாந்த்தும் உதவி செய்ய வேண்டும் என்று செல்லூர் ராஜூ அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாகுடியில் உள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆர் ஜே தமிழ்மணி சாரிடபிள் டிரஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்று இருந்தது. இந்த முகாமை அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே ராஜு தொடங்கி வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப்பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது கரண்ட் கட் ஏற்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால், திமுக அரசு வந்ததால் தான் இந்த நிலைமை. தமிழக அரசு இருளில் மூழ்கி இருக்கிறது. திமுக என்ற கரடியிடம் மாட்டிக் கொண்டு தமிழக மக்கள் தற்போது திண்டாடுகின்றனர். மின் கட்டண உயர்வு தொழிற்சாலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

செல்லூர் கே ராஜு அளித்த பேட்டி:

இதை மறைப்பதற்கு தான் கரடி கதை. ஒற்றை தலைமையில் கீழ் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. இதனால் ஒற்றை தலைமையின் கீழ் வருகிற தேர்தலில் அதிமுக வெற்றிவாகை சூடும். பாஜாவுக்கு அதிமுக பல்லக்கு தூக்கிறது என மு க ஸ்டாலின் கூறி இருந்தார். பாஜகவுக்கு முதன்முதலில் பல்லக்கு தூக்கியது திமுக தான். அதோடு அவர்கள் மத்திய பாஜக அமைச்சரவையில் பதவிகளை எல்லாம் அனுபவித்திருந்தார்கள். திமுக கூட்டணி கட்சியின் பலத்தால் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது.

அதிமுக-பாஜக கூட்டணி:

ஆனால், வெவ்வேறு கொள்கை வேறுபாடு இருக்கிறது. அதேபோலத்தான் அதிமுகவுக்கு பாஜவுடன் கூட்டணி. ஒவ்வொரு கட்சியும் அவர்கள் கொள்கையில் இருந்து மாறுபட மாட்டார்கள். தற்போது உள்ள அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு உணவு கொடுக்கிறார்கள். அதுவும் உப்புமா, கிச்சடி என்று கொடுக்கிறார்கள். ஆனால், சிறையில் உள்ள கைதிகளுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேலைகளிலும் சிக்கன், மட்டன் என சத்தான உணவுகளை வழங்குகிறார்கள்.

-விளம்பரம்-

திமுக குறித்து சொன்னது:

பள்ளி மாணவர்கள் உப்புமா சாப்பிடுவதா? குற்றம் செய்த கைதிகளுக்கு சிக்கன்- மட்டனா? இது என்ன நியாயம்? அதோடு பொறியாளர் பென்னி குயிக் சிலை திமுக சார்பில் லண்டனில் ஒரு பூங்காவில் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு பராமரிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக லண்டனில் உள்ள அந்த சிலை மூடி வைக்கப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்றால் அந்த சிலையை அப்புறப்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் கூறி இருக்கிறது. இது திமுக அரசுக்கு பெரும் அவமானம்.

ரஜினி குறித்து சொன்னது:

சிலை திறக்காவிட்டால் தமிழ்நாடு மிகப் பெரிய அவமானத்தை சந்திக்க நேரிடும். அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயின் உதவி செய்யும் மனப்பான்மையை நாங்கள் வரவேற்கிறோம். அவர் விளம்பரத்திற்காக செய்தாலும் உதவி மனப்பான்மையாக செய்கிறார். ஏழை மக்களுக்காக தன்னுடைய உதவிகளை செய்கிறார். எம்ஜிஆர் போலவே விஜய் தொடர்ந்து உதவி செய்கிறார். ஆனால், ரஜினி இதை செய்தால் நன்றாக இருக்கும். அவர் கோடி கணக்கில் பணம் வைத்திருக்கிறார். இதனால் அவர் முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். அவர் மட்டும் இல்லாமல் தொடர்ந்து பிற நடிகர்களும் உதவி செய்ய வர வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

Advertisement