உலக சுகாதார துறையில் உயரிய பொறுப்பை பெற்ற முதல் தமிழர். இவர் யாருடைய மகள் தெரியுமா ?

0
6134
somyaswami
- Advertisement -

உலக ஆளும் தமிழர்கள் என்று பார்த்தால் கூகுள் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை. இரும்பு மங்கை இந்திரா நூயி, கே ஆர் ஸ்ரீதர் (சி இ ஓ ப்ளூம் எனர்ஜி ) என்று இப்படி சொல்லிக்கொன்டே போலாம். இதில் ஒரு சில தமிழர்கள் சர்வதேச நிறுவனத்தில் உயரிய பதவியில்கலக்கி கொண்டு வருகின்றனர். அவர்களை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் சென்னையை சேர்ந்த 60 வயது பெண் தமிழர் தற்போது உலக சுகாதார துறையின் உயரிய பதவியை பெற்று இந்தியாவிற்கும் தமிழகர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

-விளம்பரம்-
 Soumya Swaminathan

60 வயதான சௌமியா சுவாமிநாதன் சென்னையை சேர்ந்தவர் தான். தனது மருத்துவ படிப்பை புனேவில் உள்ள Armed Force மருத்துவ கல்லூரியில் முடித்தார். அதனை தொடர்ந்து தனது மேல் படிப்பை AIIMS கல்லூரியில் முடித்தார் செளமியா. குழந்தை நல மருத்துவாரான இவர் 250 மேற்பட்ட வல்லுனர்கள் மதிப்பாய்வு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் சௌமிய UNICEF, UNDP மற்றும் உலக வங்கியில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை மருத்துவ துறையில் அவரது பங்களிப்புக்காக 9 விருதுகள் பெற்றுள்ளார்.

இதையும் பாருங்க : ஜோதிகா காதலுக்கு நானும் உதவி செஞ்சிருக்கேன் – சூர்யாவுடன் மூன்று படத்தில் நடித்த நடிகை பேட்டி.

- Advertisement -

காசநோய்க்கான ஆராய்ச்சி மூலம் தான் மருத்துவ விஞ்ஞானியாக அறியப்பட்டார். இவர் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பசுமை புரட்சியின் தந்தை என்ற அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் செளமியா சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) துணை இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்திய பசுமை புரட்சியின் தந்தை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின்

அந்த பதவி உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும். இந்த உயர்ந்த நிலையை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை அப்போது இவர் பெற்றிருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சுகாதார அமைப்பின் ணை இயக்குனராக பணியாற்றி வந்த சௌமியா சுவாமிநாதன் தற்போது உலக சுகாதார துறையில் இயக்குனராக இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த உயர்ந்த நிலையை பிடித்த முதல் இந்தியர், அதவாது முதல் தமிழர் என்ற பெருமை பெற்றுள்ளார் சௌமியா சுவாமிநாதன்.

இதையும் பாருங்க : ‘என் நாட்டிற்கு தேவையான நேரம் இது’ – மீண்டும் டாக்டர் சேவைக்கு வந்த நடிகருக்கு குவியும் பாராட்டு.

-விளம்பரம்-

உலக சுகாதார துறையில் புதிதாக கிடைக்கப்பெற்றுள்ள இந்த தலைமை விஞ்ஞானி, என்ற பொறுப்பு, உலக சுகாதார துறையின் நெறிமுறை பணிகளை வலுப்படுத்தவும், பொது சுகாதார முன்னுரிமைகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், நாடுகளில் சுகாதார ஆராய்ச்சி திறனை வலுப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான அணுகலை துரிதப்படுத்தவும் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement