‘என் நாட்டிற்கு தேவையான நேரம் இது’ – மீண்டும் டாக்டர் சேவைக்கு வந்த நடிகருக்கு குவியும் பாராட்டு.

0
146109
doctor
- Advertisement -

ஹிந்தி திரையுலகில் 2015-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘கப்பர் இஸ் பேக்’. இதில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்த படத்தினை பிரபல இயக்குநர் க்ரிஷ் இயக்கியிருந்தார். இப்படம் 2002-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்து சூப்பர் ஹிட்டான ‘ரமணா’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆஷிஷ் கோகலே என்பவர் நடித்திருந்தார். இது தான் ஆஷிஷ் கோகலே அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ‘லவ் யூ ஃபேமிலி’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார் ஆஷிஷ் கோகலே. அதன் பிறகு ஹிந்தி திரையுலகுடன் தனது திரை பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகர் ஆஷிஷ் கோகலே, அடுத்ததாக மராத்தி திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். மராத்தி மொழியில் ‘கண்டிஷன்ஸ் அப்ளை, ரெடி மிக்ஸ், பாலா, மொகரா புலாலா’ போன்ற சில படங்களில் நடித்தார் ஆஷிஷ் கோகலே.

இதையும் பாருங்க : திருமணமான இத்தனை நாட்களிலேயே விவாகரத்து குறித்து யோசித்துவிட்டேன். அப்போதே கூறியுள்ள ரம்யா.

- Advertisement -

அதன் பிறகு ‘சோனி டிவி’-யில் ஒளிபரப்பான ‘பியார் கோ ஹோ ஜானே டு’ மற்றும் ‘தாரா ஃப்ரம் சதாரா’ ஆகிய இரண்டு ஹிந்தி சீரியல்களிலும் ஆஷிஷ் கோகலே நடித்திருக்கிறார். வெள்ளித் திரையிலும், சின்னத் திரையிலும் நடிகராக தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் ஆஷிஷ் கோகலே, அவரது ரியல் லைஃபில் ஒரு டாக்டராம். பகலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டு நடிக்கும் ஆஷிஷ் கோகலே, இரவு நேரத்தில் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறாராம்.

தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது நடிகர் ஆஷிஷ் கோகலேவிற்கு ஷூட்டிங் எதுவும் இல்லாததால், முழு நேரமும் மும்பையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறாராம்.

இதையும் பாருங்க : அட, தாராள பிரபு படத்தில் வந்த குழந்தை ‘ட்வின்ஸ்’சாம்-ஹரிஷ் கல்யாண் பதிவிட்ட குயூட் புகைப்படம்.

-விளம்பரம்-

மேலும், இது தொடர்பாக ஆஷிஷ் கோகலே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “நான் உங்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இப்போது 144 போடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement