காவல் துறை அதிகாரிகளை தாறு மாறாக தாக்கிய குடி போதை ஆசாமியின் தற்போதைய நிலை.!

0
1072
Chennai-man
- Advertisement -

தற்போதெல்லாம் காவல்துறையிடம் குடித்துவிட்டு ரகளை செய்வது ஒரு பேஷனாக ஆகிவிட்டது. சமீபத்தில் நான்கு இளைஞர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தாக்கிவிட்டு தப்பித்து சென்ற வீடியோ ஒன்று பெரும் வைரல் ஆனது. பின்னர் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய நபரொருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வீடியோ ஒன்று சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-
தொழிலதிபர் நவீனின் கார் விபத்துக்குள்ளானது

கடந்த சில தினங்களுக்கு மதுரை மாவட்டம், வெள்ளங்குடி கிராமம், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த நவீன் என்பவர் நீலாங்கரை காவல் நிலையம் அருகே குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் காரிலிருந்த பலூன் ஓப்பனானதால் நவீன், உயிர்தப்பினார்.

இதையும் பாருங்க : வெளியானது நேர்கொண்ட பார்வை படத்தின் ‘வானில் இருள்’ பாடல் வீடியோ.!

- Advertisement -

இந்த விபத்தை அடுத்து நாவினை காவல் துறையினர் மீட்ட போது போலீஸாருடன் நடுரோட்டில் நவீன் ரகளையில் ஈடுபட்டார். குடி போதையில் இருந்த அவர், போலீசை மாமன், மச்சான் என்று உறவு வைத்து பேசியத்ததோடு போலீசாரை தகாத வார்த்தைகளிலும் திட்டியுள்ளார். இதனால் அந்த போதை ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் காவல் துறையினர்.

தொழிலதிபர் நவீன் கார் மோதி சேதமடைந்த ஆட்டோ

போலீசருடம் ரகளையில் இடுபட்ட அந்த ஆசாமி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என சமூக வலைத்தளங்களில் போலி செய்தி வேகமாக பரவியது. ஆனால், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திருவான்மியூர், ராஜா சீனிவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்துவருவதும் வெளிநாடுகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்வதும் தெரியவந்தது. போலீசாரை கெட்ட வார்த்தைகளில் பேசியது மற்றும் ஆட்டோ மீது மோதியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நவீனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

-விளம்பரம்-
தொழிலதிபர் நவீன்

இந்த நிலையில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற நவீன் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. நவீனின் கையில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர் ‘நவீன் குடித்துவிட்டு போலீசிடம் ரகளை செய்ததாகவும் அப்போது அவரை கைது செய்ய முயற்சித்த போது அவர் தவறி கீழே விழுந்து கையை முறித்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் அவருக்கு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். ஆனால் ,மக்களோ போலீசிடமே வம்பு செய்தால் இதுதான் கதி என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement