ப்ளீஸ் ! தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்னிடம் கெஞ்சும் இயக்குனர் – வீடியோ உள்ளே !

0
1015
chennai-to-singapore-movie-director

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் உள்ளிட்ட பல இணையதளங்கங்களினால் திரைப்படங்கள் பெருமளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவது உண்மை நிலையே. இது தெரிந்தும் சினிமா தொழிலாளிகளின் உழைப்பில் திருடுவது போல் ஒவ்வோரு படத்தையும் பட ரிலீஸ் அன்றே வெளியிட்டு வருமானம் பார்த்து வருகின்றனர் அது போன்ற திருட்டு இணையதளங்கள்.
tamil-rockersஇது குறித்து பல்வேறு சினிமா கலைஞர்கள் பேசி வரும் நிலையில் தற்போது ‘ சென்னை டூ சிங்கப்பூர்’ பேச இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் அவர்களிடம் மனம் உருக ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சென்னை டூ சிங்கப்பூர் படத்தினை இயக்கியவர் அப்பாஸ் அக்பர், மற்றும் இசையம்மப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இருவரும் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை பதிவு செய்து அந்த வேண்டுகோளை தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் போன்ற இணையாதளங்களுக்கு வைத்துள்ளனர்.


அந்த வீடியோவில், நாங்கள் உங்களிடம் நேரடியாக பேசுகிறோம். கடந்த 6 வருடமாக இந்த படத்தினை எடுத்து வருகிறோம். ஆறு வருடமாக பெரிய கலைஞர்கள் இன்றி கிட்டத்தட்ட ₹ 8 கோடி ரூபாய் போட்டு இந்த படத்தினை தயாரித்துள்ளோம்.

இது வலி மிகுந்தது. எங்களது உழைப்பு உங்கள் சைட்டில் இருக்கிறது. நாங்கள் பட்ட கஷ்டங்களை இந்த வீடியோவில் சொல்ல நேரம் பத்தாது. அதை சொல்லவும் கூடாது. ஏனென்றால் கஷ்டப் பட வேண்டும் என முடிவு செய்து இங்கு வந்து அதை சொல்லக் கூடாது.
chennai to singaporeபெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் ஒரு வாரத்தில் எல்லாம் அந்த ₹ 8 கோடியை எடுத்து விட முடியாது. ஒரு 30 நாட்கள் மட்டும் படத்தினை வெளியே விடுங்கள். சரியாக 31ஆவது நாள் படத்தினை உங்கள் நெட்டில் போடுங்கள். இது எங்களது வேண்டுகோள்.

எனக் கூறி நெகிழ்ச்சி போங்க அந்த வீடியோவில் பேசி உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம், தமிழ் ராக்கர்ஸ் கல் நெஞ்சமா இல்லை, கடவுள் நெஞ்சமா என !