மயக்க மருந்து கொடுக்கப்படாமல் நடந்த அறுவை சிகிச்சை – வலியை மறக்க இளையராஜா பாடலை பாடிய நோயாளி. என்ன பாடல் பாருங்க.

0
839
ilayaraja
- Advertisement -

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சையின்போது இசைஞானி இளையராஜாவின் பாடலை பாடி அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது. கர்நாடக சங்கீத பாடகியாகவும் ஆசிரியராகவும் இருப்பவர் சீதாலட்சுமி. இவர் சென்னையை சேர்ந்தவர். சீதாலக்ஷ்மி முதிர்ச்சியடைந்த நிலையில் கடந்த ஆண்டு மார்பகப் புற்று நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இவர் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் உள்ள மார்பக புற்றுநோய் சிகிச்சை துறையில் அனுமதிக்கப்பட்டார். பின் இவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

-விளம்பரம்-

சிகிச்சை போது பயத்தை குறைப்பதற்காகவும் அமைதிபடுத்துவதற்காகவும் மருத்துவர்கள் இசை பாடலை ஒலிக்கச் செய்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை நடைபெறும் போது சீதாலட்சுமி அறுவை சிகிச்சை மருத்துவரிடம், மயக்கவியல் மருத்துவரிடமும் இயல்பாக பேசி இருந்தார். அது மட்டும் இல்லாமல் அவர் அறுவை சிகிச்சை அரங்கில் உற்சாகமான மகிழ்ச்சியான சூழலில் இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின் பயத்தை போக்குவதற்காக மருத்துவர்கள் அவரிடம் ஒரு பாட்டு பாடுமாறு கேட்டுக்கொண்டதற்கு சீதாலட்சுமி ஒரு பாட்டை பாடினார்.

- Advertisement -

அறுவை சிகிச்சையில் பாட்டு பாடிய சீதாலட்சுமி:

பின் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். உண்மையிலேயே அறுவை சிகிச்சையின் போது அவர் பாடலை பாடிய தகவல் அவரையே வியப்பில் ஆழ்த்தி இருந்தது. மேலும், மார்பகப் புற்றுநோய் விரிவாக பரவி இருந்தும் அறுவை சிகிச்சை நடைபெறும் போது ஒரு நோயாளி விழித்திருந்ததோடு மட்டுமில்லாமல் பாடல் பாடிய நிகழ்வு தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்த மாதிரியான நிகழ்வு இதுவே முதல்முறை என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

நலமாக வீடு திரும்பிய சீதாலட்சுமி:

பின் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக சீதாலட்சுமி வீடு திரும்பி இருக்கிறார். அவருக்கு மருத்துவர் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீதாலட்சுமி கூறியிருப்பது, புற்று நோயிலிருந்து குணமடைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதும். பின் தரமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனை அருகே உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

-விளம்பரம்-

அறுவை சிகிச்சை குறித்து சீதாலட்சுமி அளித்த பேட்டி:

எனக்கு சிகிச்சை செய்து கொள்வதற்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால், அந்த சூழ்நிலை காரணமாக அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். புற்றுநோய் பாதித்த போது என்னால் வாய் திறந்து கூட பேச முடியாது. பின்னர் அறுவை சிகிச்சைக்கு சென்ற போது மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். வலியை எப்படி தாங்குவது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. பின் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் வலியை தாங்கிக்கொள்ள என்னைப் பாடச் சொன்னார்கள்.

இசைஞானி இளையராஜாவின் பாட்டு பாடிய சீதாலட்சுமி:

நான் பாடல் ஆசிரியராக இருந்ததால் இசைஞானி இளையராஜாவின் ‘கற்பூர பொம்மை’ ஒன்று என்ற பாடலை பாடினேன். உலகத்திலேயே புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிய முதல் பெண் என்று சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சீதாலட்சுமி கூறி இருந்தார். இப்படி இவர் கூறியதும், பாடிய வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இதை பார்த்த பலரும் சீதாலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement