கவின் விஷயத்தில் சேரன் செய்த செயல்! ஷாக்கான ரசிகர்கள்.!

0
2175
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் திடீரென்று யாரும் நம்ப முடியாத அளவிற்கு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெறும் போட்டி அனைத்திலும் யார்? வெற்றி பெற்று சிறந்து விளங்குகிறார்களோ அவர்களை நேரடியாக இறுதி போட்டிக்கு கொண்டு செல்வதற்கான டிக்கெட் வழங்கப்படும் என்றும் பிக்பாஸ் குழு அறிவித்தது. அதன்பின்னர் போட்டியாளர்கள் அனைவரும் கவனமாகவும், நேர்மையாகவும் ஒருவருக்கு ஒருவர் சவாலாகவும் தங்களுடைய திறமையை காட்டி போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நடக்கும் எல்லா போட்டிகளில் முழு மனதுடனும் அதிக கவனத்துடனும் விளையாடி வந்தார்கள். அதிலும் நேத்து நடந்த போட்டியை பார்த்து மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இப்படியெல்லாம் டுவிஸ்ட் வைக்கிறார்களா?? பிக்பாஸ் வீட்டில் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

-விளம்பரம்-

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்கள் வயதின் அடிப்படையில் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் சேரனிடம் எந்த கருத்துக்களையும் தமாஷாக பேசியும், கிண்டல் செய்தும் விளையாட மாட்டார்கள். அவர் எப்போதும் தனிமையில்தான் இருப்பார்.அதுமட்டுமில்லாமல் சேரனுக்கும், கவிஞனுக்கும் ஒரு பங்காளி சண்டை போல் இருந்துக்கொண்டே வந்தது, அதற்கு காரணம் லாஸ்லியா தான். சேரன் அவர்கள் லாஸ்லியாவை தன் மகளைப் போல பார்த்துக் கொண்டார். ஆனால் கவினுடன் பழகுவதை சேரன் எதிர்த்தார். கவினுக்கும்,லாஸ்லியாவுக்கும் இருந்த காதல்
சேரனுக்கு பிடிக்கவில்லை.கவின் , லாஸ்லியாவிடம் தப்பு தப்பாக சேரன் பற்றி குறை கூறுகிறார்கள் என்றும், லாஸ்லியாவிடமிருந்து பிரிக்க நிறைய முயற்சிகள் செய்தார் என்ற விமர்சனங்கள் வெளிவந்தன. அதிலும் கிடைக்கும்போதெல்லாம் சேரனும், கவினும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

- Advertisement -

நாமினேஷன் என்று வந்தால் போதும் சேரன் கவினையும், கவின் சேரனையும் சொல்வது தான் வாரம் வாரம் தவறாமல் நடந்து கொண்டு வந்தது. இதுவரை எந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒருவரை ஒருவர் பாராட்டியது கிடையாது, கை கொடுத்தது கிடையாது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் நேற்று நடந்த சுமை தூக்கும் போட்டியில் கவின் தன்னுடைய விடாமுயற்சியில் கடைசி வரை போராடி கொண்டிருந்தார். இதுவரை அவர் இந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த போட்டிகளை விட இந்த போட்டிகளில் கொடுத்த முக்கியத்துவத்தை வியப்பில் ஆழ்த்தியது.கவின் சூப்பராக விளையாடி வந்தார். இதனால் அனைவருமே ஆச்சரியத்தில் அசந்துபோன அளவிற்கு தன்னுடைய விளையாட்டை விளையாடினார். மேலும் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் கவினை பாராட்டியும், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சேரன் கவினை பார்த்து “சூப்பராக விளையாடின தம்பி” என்று கூறியதை கேட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களும்,மக்களும் அதிர்ந்து போயினர்.

kavin-cheran

குறிப்பாக கவின் ஆர்மி நண்பர்கள் தலை சுற்றிக் கீழே விழும் அளவிற்கு இருந்தது அந்த சம்பவம். மேலும் சேரன் அவர்கள் கவினை பார்த்து “தம்பி” என்ற கூறிய வார்த்தையை திரும்ப திரும்ப கேட்டு வந்தனர் ரசிகர்கள். இதுவரை சமூக வலைத்தளங்களில் கவின், சேரன் அவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த இனிப்பான செய்தி மன ஆறுதலாக இருக்கும்.இந்த செயல் அவர்களின் நிலைமையை மாற்றும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இதை வைத்து அவர்கள் சண்டை போடுவார்களா ?என்ற கருத்தும், இனிமேலாவது அவர்கள் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருப்பார்களா? என்று பல கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்

-விளம்பரம்-
Advertisement