நடிப்பை விட்டுவிட்டு… ஐஸ் ஃபேக்டரி நடத்தி வரும் பிரபல நடிகை.! யார் தெரியுமா..?

0
1439
chitra
- Advertisement -

ஷேவ் பண்ணாத தாடியுடன் கையில் மாலையை வைத்துக்கொண்டு ஶ்ரீவித்யாவைப் பார்க்கக் காத்திருந்தபடி, தமிழ் சினிமாவுக்குள் ரஜினி அடியெடுத்து வைத்த ‘அபூர்வ ராகங்கள்’ க்ளைமாக்ஸை யாரும் மறக்கமுடியாது. ஶ்ரீவித்யாவின் கச்சேரி நடக்கும் அந்த அரங்கத்தின் வாசலில் வந்து நின்ற ரஜினி, ஒரு சிறுமியை அழைத்து, அந்தச் சிறுமி கையில் தன்னுடைய மன்னிப்புக் கடிதத்தைக் கொடுத்து, ஶ்ரீவித்யாவிடம் கொடுக்கச் சொல்வார். அந்தச் சிறுமிதான், இந்தவார ‘அப்போ இப்போ’ நாயகி.

-விளம்பரம்-

Actresschithra

- Advertisement -

பின்னாளில் ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’, ‘என் தங்கச்சி படிச்சவ’ போன்ற பல படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்திருந்த சித்ராதான் அவர். தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து ‘நல்லெண்ணெய்’ சித்ரா எனவும் அறியப்பட்ட இவருக்கும் ‘அபூர்வ ராகங்கள்’தான் அறிமுகப்படம்.

பிளஸ் டூ பரீட்சை முடிஞ்சது. அதுல கொஞ்சம் வரிசையா படங்கள் அமைஞ்சது. ‘ஊர்க்காவலன்’, ‘நினைவுச் சின்னம்’னு தமிழ்ல ஒரு பக்கம் நடிச்சுக்கிட்டே, தெலுங்கு பக்கமும் போனேன். மலையாளம் போலவே அங்கேயும் ஹீரோயின் கேரக்டர்.

-விளம்பரம்-

‘மத்த மொழிகள்ல ஹீரோயினா நடிச்ச மாதிரி, தமிழ்ல ஏன் பண்ணலை?’னு கேட்கலாம். அதென்னவோ தெரியலை, இங்கே அந்தமாதிரி அமையலைங்கிறதுதான் உண்மை. ஆனா, கதையில எனக்கு முக்கியத்துவம் இருந்தது. அதுவும் ஒருவகையில நல்லதுனு நினைச்சுக்கிட்டேன். ஏன்னா, கட்டிப் பிடிக்கற காட்சிகளுக்கெல்லாம் தயங்கின குடும்பம்தான் எங்களோடது.Actresschithra

`மகளை ஸ்கூல் கொண்டுபோய் விடுறது, வீட்டுல சமையல்… இப்படிப் பாதிநேரம் போகும். கணவர் ஐஸ்க்ரீம் ஃபேக்டரி வெச்சிருக்கார். நேரம் கிடைச்சா அங்க போய் அவருக்கு உதவுவேன். மதிய நேரங்கள்ல நான் நடிச்ச பழைய படங்கள் டி.வியில் ஒளிபரப்பானா, பார்ப்பேன்” என்றவர், கொசுறாக இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

actress-chithra

முதலாவது : மறுபடியும் நடிக்கப் போகிறாராம். ‘மலையாளத்துல கமிட் ஆகிட்டேன். தமிழ்லேயும் வாய்ப்பு வந்தா, இனி பண்ணலாம்னு இருக்கேன்!

Advertisement