அஞ்சலி படத்தில் நடித்த குட்டி பையன் யார் தெரியுமா ! பிரபல நடிகரா – புகைப்பட உள்ளே

0
1085
Anjali movie
- Advertisement -

1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் அஞ்சலி. அந்த வருடத்தில் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விழாவிற்கு பரிந்துரைக்க தேர்வு செய்யப்பட்ட படம் இது. இந்த படத்தில் அர்ஜுன் என்ற சின்ன பையன் கேரக்டரில் ஒரு சிறுவன் நடித்திருப்பார். அந்த பையன் யார் தெரியுமா? அந்த பையன் வளர்ந்து ஒரு பெரிய ஹீரோவாக மாறிவிட்டார்.

anjali tarun

அவருடைய பெயர் தருண். இவர் 1983ஆம் ஆண்டு தெலுங்கானா மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய அப்பா சக்ரபாணி ஒரியா மொழியில் நடிகராக நடித்தவர். அம்மா ராஜா ரமணி தெலுங்கு மொழியில் நடிகையாக நடித்தவர்.

- Advertisement -

தன்னுடைய 11 வயதில் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை பெற்றார் தருண். அதன் பின்னர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மலையாள மொழியிலும் சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது பெற்றார்.

tarun

பின்னர் 2000ஆம் ஆண்டு ஹீரோவாக தெலுங்கு மொழியில் அறிமுகம் ஆனார். நுவ்வே காவாளி என்ற இந்த படமும் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்றது. தருண் தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில்

காதல் சுகமானது
புன்னகை தேசம்
எனக்கு 20 உனக்கு 18,

ஆகிய படங்களிலும், கடைசியாக 2014ஆம் ஆண்டு யுத்தம் என்ற படத்திலும் நடித்தார் தருண். கடந்த வருடம் தெலுங்கு சினிமா நடிகர்கள் பலர் மீது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

tarun-kumar

அந்த நடிகர்களில் தருனும் ஒருவர். 36 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் தருண்.

Advertisement