தங்கத்தை தான் பூட்டி வைப்பாங்க, இரும்பை அல்ல – சர்ச்சையை கிளப்பிய பாடகியின் பேச்சி, சின்மயி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
574
chinmayi
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. இப்படி ஒரு நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள். இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மையி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். மேலும், இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சின்மயி:

அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கர்நாடக பாடகி போட்ட விடியோவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து சின்மயி டீவ்ட் போட்டிருக்கிறார். தற்போது இது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கர்நாடக பாடகி கூறி இருப்பது, நாம் எப்போதும் தங்கத்தை தான் பீரோவில் பூட்டி வைப்போமே தவிர இரும்பை கிடையாது.

கர்நாடக பாடகி போட்ட விடியோ:

அதனால் தான் ஆண்களைப் போல பெண்களுக்கு ஏன் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். நான் அவர்களிடம் சொல்வேன் நீங்கள் தங்கம் அவர்கள் இரும்பு. அதனால் தான் அவர்களை விட உங்களுக்கு குறைவான உரிமைகள் இருக்கிறது. எதை நீங்கள் மிகவும் மதிக்கிறார்களோ அதைத்தான் நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வீர்கள். இதில் குறைவாக நடத்தப்படுவது என்று அர்த்தம் இல்லை. யார் ஒருவரை நீங்கள் அதிகம் மதிக்கிறீர்களோ அவர்களுக்கான உரிமைகள் குறைந்துவிடும் அதுதான் இங்கும் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

கன்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் சிலர் எப்படி பெண்ணை தங்கத்துடனும் ஆணை இரும்புடனும் ஒப்பிடலாம் என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சின்மயி கூறியது, ‘எது எப்படி இருந்தாலும் பெண் வெறுப்பு என்றால் பெண் வெறுப்பு தான். இதை கேட்கும் போது முகமது அலி சொன்னது போல தங்கமும் முத்துக்களும் ஆழத்தில் தான் புதைந்து இருக்கும்.

சின்மயி பதிவிட்ட பதிவு:

அதேபோல பெண்களும் தங்களை மூடிக்கொள்ள வேண்டும் என்பது தான் ஞாபகம் வருகிறது. பட்டாம் பூச்சியை போல பறந்திருங்கள் தேனீயைப் போல கொட்டுங்கள். யாருடைய கருத்தும் தவறாக இருந்தால் அதை நிச்சயம் சொல்ல வேண்டும். பெண்களே பெண்களுக்கு எதிராக பேசுவது புதிதாக விஷயம் கிடையாது. சுயமாக சிந்திக்கும் படித்தவர்கள் கூட இறுதியில் ஆண்கள் அமைத்த ஒரு அமைப்பில் வாழ வேண்டும் என்பதை தான் திரும்ப திரும்ப செய்கிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படி இவர் கூறிய பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement