காதல் திருமணத்தால் ஆல்யா மானஸாவுக்கு நேர்ந்த சோகம். கர்பமாகியும் இப்படி ஒரு பிரச்சனையா.

0
81336
sanjeev
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று இருந்தது. இந்த தொடரில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற ஜோடிகளாக திகழ்ந்து வந்தார்கள். அதையும் தாண்டி இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியை நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் யாருக்கும் அறிவிக்காமல் திடீர் திருமணம் செய்து கொண்டார்கள்.

Alya Manasa, Sanjeev

- Advertisement -

இந்த திடீர் திருமணம் குறித்து பேசிய சஞ்சீவ் “எங்களுக்கு மே 27ம் தேதியே திருமணம் முடிந்துவிட்டது. ஆல்யா மானசா வீட்டில் எங்கள் காதலுக்கு ஒப்புதல் இல்லை. எவ்வளவோ பேசி பார்த்தோம். வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அவரசமாக திருமணம் செய்துகொண்டோம் மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஆல்யா மானஸா கழுத்தில் இஸ்லாம் மதத்தில் அணியும் தாலியும் இருக்கிறது. சஞ்சீவின் நிஜப்பெயர் “syed Azharuddin Buhari” என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : உங்க அம்மாகிட்ட காட்டு சந்தோசபாடுவாங்க. யாஷிகாவின் புகைப்படத்தை கழுவி ஊற்றும் ட்விட்டர் வாசிகள்.

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா மானஸா வீட்டில் இவர்களது திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணம் முடிந்து இத்தனை மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆல்யா மானஸாவின் கர்ப்பம் குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசியுள்ள அவர், எங்கள் வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான தருணம் எங்கள் கல்யாணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் சந்தோஷமாக நடக்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம். ஆனால், நாங்கள் நினைத்தது போல நடக்கவில்லை. இதனால் ஆல்யா ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார். அவரிடம் நான் எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஆல்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று உறுதியானதும் தனது பெற்றோர்களுக்கு சொல்லச் சொன்னார். உடனே அவரது தந்தையை சந்தித்து விஷயத்தை சொன்னேன். அவர் கண்ணில் கண்ணீர் வந்தபடி ‘எல்லாம் சரியாகிடும்னு சொல்லுங்க’ என்றார்.

அவரது அப்பா பேசுவதால் தற்போது எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கூடியிருக்கிறது எனவே நிச்சயம் என்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்து ஆல்யாவை ஆசீர்வாதம் செய்வார் என்று நம்புகிறேன். பேரனோ, பேத்தியோ தன்னுடைய குழந்தையை முதலில் தனது அம்மாவின் கையில் தான் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் சஞ்சீவ்.

Advertisement