கலைமாமணி விருது வென்ற சரவணன்.! சின்மயி பதிவிட்ட கருத்து.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

0
26317
saravanan-Chinmayi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன் எந்த ஒரு பேட்டியும் அளிக்காமல் தான் இருந்து வருகிறார். சொல்லபோனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணனை புகைப்படம் கூட வெளியாகாமல் தான் இருக்கிறது. கடந்த வார இறுதியிலாது சரவணன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரவணன் குறித்து கமலா போட்டியாளர்களோ வாயே திறக்கவில்லை.

இதையும் பாருங்க : ரைசா நித்யானந்தா சீடராகிவிட்டாரா.! அவரே பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.!

- Advertisement -

சரவணன் பிரச்சனை தீயாக பரவிய போது சரவணன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த சின்மயி, பேருந்தில் பெண்களை உரசுவதாக கூறும் ஒரு நபரின் பேச்சை பிரபல தொலைக்காட்சியில் பெருமையுடன் ஒளிபரப்புகிறது அதனை ரசிகர்களும் கைத்தட்டி ஆதரவளிக்கின்றனர். இது என்ன விளையாட்டா? பெண்களிடம் தவறாக நடப்பவர்களை கண்டு ரசிகர்கள் கைதட்டுவார்களா என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைத்தபடி பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான  “கலைமாமணி” விருதுகளை   தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதில் சரவணனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இந்த விருதினை சரவணன் தனது குழந்தையுடன் சேர்ந்து பெற்றுக்கொண்டார். சரவணன் கலைமாமணி விருதினை பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள சின்மயி, அவரை அவரை நினைத்து நான் சந்தோசப்படுகிறேன். தமிழக அரசு சிறப்பான தேர்வினை செய்துள்ளது. பிக் பாஸ் வீடோ, அவரது சொந்த வீடோ அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. உங்களுக்கு இது உரித்த ஒன்று தான் என்று பதிவிட்டுள்ளார். சரவணனை திட்டிவிட்டு தற்போது இப்படி பதிவிட்டுள்ள சின்மையை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement