சிவகார்த்திகேன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி. என்ன நடக்க போகுதோ.

0
27391
chinmayi
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் இவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்று புகார் அளித்து உள்ளார். இதனால் தமிழ் திரை உலகமே அதிர்ந்து போனது என்று சொல்லலாம். சின்மயி அவர்கள் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் இவர் பல படங்களில் பாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். இதை தொடர்ந்து இவர் படங்களில் பின்னணி குரல் தருபவராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாகவே சின்மயி குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக me too என்ற ஹஸ்டேக் ஒன்றையும் உருவாக்கினார். இதன் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தினார்கள். அதோடு பாடகி சின்மயி அவர்கள் எனக்கு வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று புகார் அளித்து உள்ளார். இது ஒட்டுமொத்த சினிமா உலகையே உலுக்கியது என்று சொல்லலாம். இதனால் ஆர்ட்டிஸ்ட் சங்கமும்,டப்பிங் யூனியனும் சின்மயியை யூனியனில் இருந்து நீக்கிவிட்டார்கள். உடனே சின்மயி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது தான் சின்மயிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து அவரை யூனியனில் இணைத்தார்கள். இந்த பிரச்சனை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.

இதையும் பாருங்க : பெண்களில் கனவுக் கண்ணனுக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். புலம்பும் ரசிகர்கள்.

- Advertisement -

அது மட்டுமில்லாமல் ஒரு வருடமாக அவர் எந்த படத்திற்கும் டப்பிங் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் பின்னணி பாடகி சின்மயி அவர்கள் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள “ஹீரோ” படத்தில் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷினிக்கு டப்பிங் செய்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த படத்திற்கு சின்மயி தான் டப்பிங் செய்ய வேண்டும் என இயக்குனர் அடம் பிடித்தாராம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படம் தியேட்டர்களில் மாஸ் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து அவர் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிஎஸ் மித்ரன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு இந்த படத்தில் 18 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய பிஜிஎம் டிராக் ஒன்றை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்திருக்கிறார். இது சமீபத்தில் தான் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் யுவன்சங்கர் ராஜாவுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றார்கள். அதோடு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

-விளம்பரம்-

ஏன் என்றால் பின்னணி பாடகி சின்மயி அவர்கள் ஹீரோ படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு டப்பிங் பேசியுள்ளார். மேலும், சின்மயி டப்பிங் செய்யக்கூடாது என ஆர்டிஸ்ட் சங்கம் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் போராட்டம் செய்தார்கள் என்று சொல்லலாம். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் ராஜேஷ் ஆகியோர் சின்மயிக்கு ஒரு வாய்ப்பளித்து உள்ளார்கள். இதற்கு சின்மயி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய உண்மையான ஹீரோ பி.எஸ் மித்ரன் தான் என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்கு என் மனதார நன்றி என்றும் கூறி உள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement