வாடகை தாய் மூலம் Twins பெற்றதாக எழுந்த விமர்சனம் – புகைப்படத்தை வெளியிட்டு சின்மயி செம பதிலடி.

0
269
chinmayi
- Advertisement -

சமீபத்தில் Twins குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக சின்மயி அறிவித்து இருந்த நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதே சமயம் ஒரு சிலர் சின்மயி Surrogacy மூலம் குழந்தை பெற்று இருப்பதாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது அதற்கு பதில்அளிக்கும் விதமாக சின்மயி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராகுல் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாசுகோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. அதே போல பாடகி சின்மயியும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல முறை இவரை சமூக வலைதளத்தில் கேலிகள் கூட செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்தது.

இதுகுறித்து பதிவிட்ட சின்மயி ‘“ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான்.எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் எனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், நான் பெண்ணாக முழுமையடையவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.நான் பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளை நேரடியாக புரிந்து கொண்டு அமைதி காத்தேன். இதை எல்லாம் தாண்டி நான் மக்களை பற்றி புரிந்துகொண்டேன் என்று உருக்கமுடன் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பொதுவாக பிரபலங்கள் பலர் கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ ஷூட் நடத்துவது, வளைகாப்பு செய்து அந்த புகைப்படங்களை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. அதே போல சின்மயிக்கு 37 வயது ஆகிறது இதனால் சின்மயி Surrogacy மூலம் அதாவது வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் என்று விமர்சனங்களுக்கு எழுந்து இருந்தது.

இந்த நிலையில் சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருந்த 32வது வாரத்தில் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே தான் கர்ப்பமாக இருந்த போது புகைப்படங்களை பதிவிடாதது ஏன் என்று கூறிய சின்மயி ‘இப்போதும் எப்போதும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாத்து தான் வைப்பேன். என்னுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படக்களை சமூக வலைதளத்தில் பதிவிட மாட்டேன்.’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement