தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.
வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர்.
இதையும் படியுங்க : தன்னிடம் தவறாக நடந்து கொண்ட பிறகும் வைரமுத்துவை சின்மயி திருமணத்திற்கு அழைத்து ஏன்?
அவரை ஆபாசமாக பேசியும், ஆபாச மெஸஜ்களையும் பலரும் அனுப்புகின்றனர். பாடகி சின்மையிடம் பலரும் முன்வைக்கும் பொதுவான கேள்வி. நீங்கள் ஏன் அப்போதே சொல்லவில்லை என்ற கேள்விதான்.
சமீபத்தில் இந்த கேள்விக்கு சர்ச்சையான முறையில் பதிலளித்துள்ளார் சின்மயி. முகநூல் பக்கத்தில் ஒரு பெண் முகத்தில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சின்மயி . அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை அவர் அடித்ததால் தற்போது அவரது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. ஏன் அப்பவே அடிக்கலன்னு கேட்ட நல் உள்ளங்களுக்கு என்று பதில் கூறியுள்ளார் சின்மயி.