தன்னிடம் தவறாக நடந்து கொண்ட பிறகும் வைரமுத்துவை சின்மயி திருமணத்திற்கு அழைத்து ஏன்?

0
1232
ChimaiVairamuthu
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

Chimai mariage

- Advertisement -

பாடகி சின்மயி கூறி இருந்த குற்றச்சாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு “வீழ மாட்டோம்” ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து வருகின்றனர்.

ஆனால், உண்மையில் பாடகி சின்மயி கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மை இருக்கிறதா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே பாடகி சின்மயி, வைரமுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளது தான். 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் சின்மயி,வைரமுத்துவுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

-விளம்பரம்-

படங்களில் ஒன்றாக பணியாற்றுவது தொழில் ரீதியாக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பாடகி சின்மயிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற போது கவிஞர் வைரமுத்துவும் சென்றிருந்தார். அந்த திருமணத்தில் வைரமுத்துவின் காலில்விழந்து ஆசியும் பெற்றார் சின்மயி.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் சின்மயிடம் கேட்ட போது, திருமணத்திற்கு நாங்கள் அழைத்தது ஏன்?. ஏனென்றால் அப்போது நான் ராகுலிடமும், அவரது குடும்பத்தினரிடமும் அதைப்பற்றி சொல்லவில்லை. அதன்பின்னர் தான் நான் கூறினேன். ஆனால் அவர்கள் என்மீது வைத்திருந்த அன்பு துளி கூட குறையவில்லை. நான் அவரை திருமணத்திற்கு அழைத்தேன். ஏனென்றால் நான் அனைத்து திரைத்துறை நிபுணர்களையும் அழைத்திருந்தேன். அவரை மட்டும் நான் அழைக்கவில்லை, அவரது குடும்பத்தையும் தான் அழைத்திருந்தேன். அப்படி இருக்கையில் நான் ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

Advertisement