பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து, ‘சக்திமான்’ நாயகனுக்கு பாடகி சின்மயி கண்டனம். அப்படி என்ன சொன்னார்.

0
659
- Advertisement -

உலகையே உலுக்கிய மீடூ விவகாரத்தில் சக்திமான் புகழ் சொன்ன கருத்திற்கு பெரும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பொதுவாகவே சினிமா உலகில் நடிக்க வாய்ப்புகள் தருவதாக கூறி நடிகைகளை பயன்படுத்திக் கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. சமீப காலமாக இது குறித்து மீடு பிரச்சனை சோசியல் மீடியாவில் தலைவிரித்து ஆடுகின்றது. முன்னணி நடிகைகள் முதல் துணை நடிகைகள் வரை என பலரும் இந்தப் பிரச்சினையை சந்தித்து உள்ளார்கள். அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் நிர்வாண போராட்டத்திற்கு பின்னர் தென்னிந்திய சினிமாவிலும் இந்த மீடூ பிரச்சனை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மீடூ பிரச்சனையில் பெண்கள் குறித்து நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இருக்கும் 2k கிட்ஸ்களுக்கு மார்வெல், டிசி என எத்தனையோ சூப்பர் ஹீரோ தற்போது இருந்தாலும் இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியே இந்த ‘சக்திமான்’தான்.இந்த சக்தி மான் தொடரை வைத்து 90 ஸ் கிட்ஸ்களைடைய பல்வேறு நிறுவனங்களும் வியாபாரம் செய்துள்ளது. சக்தி மான் ஸ்டிக்கர்களை வாங்க பல்வேறு பொருட்களை வாங்கிய 90ஸ் கிட்ஸ்கள் தான் அதிகம். மேலும், வீட்டின் கண்ணாடி, பீரோ, ரப் நோட் என்று சக்தி மான் ஸ்டிக்கர் இல்லாத ஒரு 90ஸ் கிட்ஸ்களை கூட பார்க்காமல் இருக்க முடியாது.

- Advertisement -

இந்த நிலையில் சக்தி மான் ஹீரோ முகேஷ் கண்ணா  மீடூ இயக்கம் குறித்து சமீபத்தில் பேசியதாவது ”பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீ டூ பிரச்சனை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முகேஷ் கண்ணாவின் இந்த கருத்திற்கு பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சின்மயி “பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகுதான், ‘மீ டூ’ பிரச்சினை வந்ததாக முகேஷ் கண்ணா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கைகளைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்குச் சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவதும் இல்லை, நச்சுக் கருத்தை தங்களுக்குள் வைத்துக் கொள்ளப்போவதும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement