விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தனம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வந்து விட்டார். பின் தமிழ்ச்செல்வியுடன் பேசிய தன்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்தார். அப்போது தமிழ்ச்செல்வி, என்னை விவாகரத்து கொடுத்து விட்டு வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டிருப்பார். அதற்கு சேது, தமிழை அடிக்க சென்று இந்த ஜென்மத்தில் மட்டுமில்லை ஏழெழு ஜென்மத்திலும் நீ தான் என் மனைவி என்றார். அதையெல்லாம் நினைத்து பார்த்து சேது வருத்தப்பட்டார்.

இன்னொரு பக்கம் சாவித்திரி, தாமரை இருவருமே பிச்சைக்கார வேடத்தில் வீட்டு வேலை எல்லாம் செய்து
கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, போஸ் எல்லோருமே காரில் வந்து இறங்கி சாவித்திரியை வம்பு இழுத்தார்கள். கோபத்தில் சாவித்திரி, ஈஸ்வரி மீது கல்லை தூக்கிப் போடப் போனார். ஆனால், அதெல்லாம் கனவு. பின் எப்படியாவது இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று சாவித்திரி- தாமரை இருவரும் திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி- போஸ் இருவருமே இந்த கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று யோசித்தார்கள்.
சின்ன மருமகள்:
ஈஸ்வரி, எப்படியாவது எம்எல்ஏ பொண்ணை நீ திருமணம் செய்து கொள். உன்னுடைய பெரியப்பா நம் குடும்பத்தை மதிக்கவே இல்லை. நம்மை ரொம்ப அவமானமாக நடத்துகிறார் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக போஸை ஏற்றி விட்டார். அந்த சமயம் பார்த்து காவியா, போஸுக்கு போன் செய்து ஒரு இடத்தில் வந்து சந்திக்க சொன்னார். உடனே ஈஸ்வரி, நாலு பவுன் நகையை கொடுத்து ஒரு வைர மோதிரத்தை வாங்கிக் கொண்டு போய் குடு. அப்பதான் உன்னை ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மலர், போஸ்க்கு திருமணமாவது நினைத்து ரொம்ப எமோஷனாக பேசி அழுது கொண்டிருந்தார். அதற்கு தமிழ் செல்வி அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தினார். அதற்குப்பின் தனம், உன்னை பற்றி மாமா ரொம்பவே கவலைப்படுகிறார் என்றார். அதற்கு தமிழ், அதெல்லாம் சும்மா அவருமே வேறொரு திருமணம் செய்து கொள்வார் என்றார். இதைக் கேட்டு கோபப்பட்ட சேது, சுவற்றில் இருக்கும் கொசுவை அடிப்பது போல தமிழை மிரட்டி இருந்தார். ஆனால், தமிழ் செல்வி எதுவும் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=lflQc6Clkyg
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி, என் மகனுக்கு சொந்தமாக பிசினஸ் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்கிறார். அதற்கு ராஜாங்கம், திருமணத்திற்க்கு முன் நான் ஒரு கோடி ரூபாயில் செக் தந்து விடுகிறேன். அதை வைத்து உன் மகனை சொந்தமாக தொழில் செய்ய சொல்லு என்கிறார். இதை கேட்டு சந்தோஷப்பட்ட போஸ், தமிழ்செல்வி இடம் சவால் விடுகிறார். அதற்கு தமிழ், அந்த செக் உன் கையில் கிடைக்க விட மாட்டேன் என்று பதிலுக்கு பதில் சவால் விடுகிறார்.






